ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் மிருணாள் தாக்கூர், தனுசுடன் காதல் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூட செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஹிந்தியில் சித்தாந்த் சதுர்வேதியுடன் மிருணாள் தாக்கூர் நடித்துள்ள தோ தீவானே செகர் மெய்ன் என்ற படம் வருகிற பிப்ரவரி 20ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது அப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் மிருணாள் தாக்கூர்.
தனது கடந்த கால காதல் பிரேக்கப் ஆனது குறித்த ஒரு தகவலை அவர் வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், ‛‛நான் ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அதனால் ஒரு கட்டத்தில் நீ நடிகையாக இருப்பதால் உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. என் குடும்பத்திற்கு நீ செட்டாக மாட்டாய் என்று சொல்லி என்னுடனான காதலை அவர் பிரேக் செய்து விட்டார். இந்த விஷயம் அப்போது எனக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்தியது என்றார் மிருணாள்.