பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் தயாரிக்கும் படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை இயக்குவதாக சுந்தர்.சி ஒப்பந்தமாகி சில காரணங்களால் விலகிய நிலையில் அதற்கு முன்னதாகவே ரஜினி படத்தை இயக்குவதாக பேசப்பட்ட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி, எதிர்பாராத விதமாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். குருவி தலையில் பனங்காய் என்பது போல ரஜினி படத்தை இவர் சிறப்பாக செய்து விடுவாரா என்பது ரசிகர்களிடமும் கேள்வியாக இருக்கிறது.
சமீபத்தில் வித் லவ் என்கிற படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிபி சக்கரவர்த்தி அங்கு பேசும்போது, “தலைவர் 173 பட அறிவிப்பு வெளியானதற்கு பிறகு நான் கலந்து கொள்ளும் நிகழ்வு இது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு நான் எதிர்பாராத இடத்திலிருந்து எல்லாம் எனக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் தேடி வந்தன. வித் லவ் என்கிற இந்த படத்தின் விழாவில் அன்புடன் ரஜினி ரசிகர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நான் கொடுக்கும் வாக்குறுதி என்னவென்றால், தலைவர் 173 படத்தை பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து நீங்கள் முழு திருப்தியுடன் வெளியேறுவீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன்.. இது என்னுடைய வாக்குறுதி” என்று அழுத்தமாக கூறினார்.