Advertisement

சிறப்புச்செய்திகள்

சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி | முதல்வரை சந்திக்கும் சினிமாதுறையினர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? | தனுசை விட 100 மடங்கு சிறப்பாக நடித்து இருக்கும் கஸ்துாரிராஜா: மிஷ்கின் புகழாரம் | 20 கோடி கடன் வரவில்லை.. யாரும் போன் எடுக்கலை..: கே. ராஜன் பற்றி அவர் குடும்பத்தினர் | ஹாலிவுட் பாணியில் 'டாக்ஸிக்' படத்தின் விநியோக முறையை பின்பற்றும் யஷ்! | ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வரும் பிரபாஸ்! | கிரிக்கெட் வீரர் திலக் வர்மாவுடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீலீலா! | இயக்குனர் கஸ்தூரிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ள 'ஹபீபி' மே 28 ல் ரிலீஸ் | நாகரிகமற்ற கேள்விகள்: கோபமடைந்த மாளவிகா மோகனன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரை முதன்முதலாக பார்த்து, வியந்து நின்ற சாண்டோ எம் எம் ஏ சின்னப்பதேவர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

2026 சட்டசபை தேர்தல் : களம் இறங்கும் சினிமாகாரர்கள்

30 மார், 2026 - 01:26 IST
எழுத்தின் அளவு:
2026-Assembly-Elections-Filmmakers-entering-the-fray
Advertisement

தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த ஆண்டு சட்டசபை தேர்தலில் சினிமாகாரர்கள், சினிமாவுடன் தொடர்பு உள்ளவர்கள் வேட்பாளர்களாக களம் இறங்குகிறார்கள். இன்றைய நிலவரப்படி மதுரை மத்திய தொகுதியில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குனர் சுந்தர்.சி களம் இறங்குகிறார். இவர் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டி போட உள்ளார்.

கடந்த சட்டசபை தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார் குஷ்பு. அந்த தேர்தலில் மனைவிக்காக சுந்தர்.சி வேலை செய்தார். கடந்த லோக்சபா தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி சண்முகத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. மற்றபடி, அவருக்கு அதிக அரசியல் அனுபவம் இல்லை. முதன்முறையாக இந்த தேர்தலில் களம் இறங்குகிறார். அவருக்கு ஆதரவாக குஷ்பு மற்றும் சில நடிகர், நடிகைகள் பிரச்சாரம் செய்ய வாய்ப்பு உள்ளது.

இதேப்போல், துாத்துக்குடி தொகுதியில் த.வெ.க சார்பில் விஜய் நண்பரும், இயக்குனர், நடிகருமான ஸ்ரீநாத் களம் இறங்கியுள்ளார். இவர் விஜயின் கல்லுாரி கால நண்பர். வேட்டைக்காரன், பீமா, சந்தோஷ் சுப்ரமணியம் உட்பட பல படங்களில் நடித்தவர். முத்திரை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர். இவருக்கு ஆதரவாக விஜய் கண்டிப்பாக பிரச்சாரம் பண்ணுவார் என தகவல்.

இவர்களை தவிர, நடிகர் கருணாஸ் திமுக கூட்டணியில் இருக்கிறார். இவரின் முக்குலத்தோர் புலிப்படைக்கு கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி சிவகங்கையில் உதயசூரியன் சின்னத்தில் இவர் போட்டியிடுகிறார்.

நடிகர் விஜயகாந்த் மனைவி விருத்தாசலம் தொகுதியிலும், அவர் மகன் பிரபாகரன் விருதுநகரிலும் போட்டிபோடுகிறார்கள்.

சென்னை ரோகிணி தியேட்டர் ரேவந்த், தவெக சார்பில் சென்னை மதுரவாயல் தொகுதியில் களம் இறங்குகிறார்.

நடிகர் மன்சூர் அலிகான் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பில் லால்குடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறார் விஜய்.

நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் காரைக்குடியிலும், இயக்குனர் களஞ்சியம் ஆயிரம் விளக்கிலும் போட்டியிடுகின்றனர்.

போஸ் வெங்கட், வாகை சந்திரசேகர், சத்யராஜ் மகள் திவ்யா உள்ளிட்ட பலருக்கு திமுக தலைமை சீட் தரவில்லை. பாஜவிலும் நடிகர், நடிகைகள் இல்லை என தகவல். அதிமுக சார்பிலும் சினிமாகாரர்களுக்கு சீட் தரப்படவில்லை. தஞ்சையில் போட்டியிட ஆர்வம் காண்பித்து வந்தார் கவிஞர் சினேகன்.ஆனால், அவர் சார்ந்த கமலின் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு இயக்குனருடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்தெலுங்கு இயக்குனருடன் இணையும் ... லீடர் இப்படி இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும் : ஐஸ்வர்யா லீடர் இப்படி இருந்தால் வீடும், ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap