Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துல்கர் சல்மான் உடன் பிரச்னையா : மனம் திறந்தார் டொவினோ தாமஸ்

30 மார், 2026 - 06:00 IST
எழுத்தின் அளவு:
Is-there-a-problem-with-Dulquer-Salmaan-Tovino-Thomas-opens-up
Advertisement

டொவினோ தாமஸ், கயாடு லோஹர் நடித்த மலையாள படமான பள்ளிச்சட்டம்பி ஏப்ரல் 10ம் தேதி தமிழிலும் ரிலீஸாகிறது. இது குறித்து சென்னையில் பேசிய டொவினோ, ‛‛1957ல் இந்த கதை நடக்கிறது. அந்த காலத்தில் நடந்த சில உண்மை சம்பவத்தின் அடிப்படையில், பல விஷயங்கள் கலந்து கதை நகர்கிறது. இது மத சம்பந்தப்பட்ட கதையா?, பேய் கதையா?, திரில்லர், பழிவாங்கும் கதை என இப்போது சொல்ல முடியாது. பல விஷயங்களையும், என் கேரக்டரையும் சஸ்பென்ஸ் ஆக வைத்து இருக்கிறோம். படம் பார்க்கும்போது பல உண்மைகள் தெரியும்.

நானே இன்னும் படத்தை பார்க்கவில்லை. ரசிகர்களுடன் தியேட்டரில் தான் பார்க்கப் போகிறேன. பள்ளிச்சட்டம்பி என்றால் தேவாலய காவலர் என்ற அர்த்தம். 2018 காலத்தில் இருந்து இந்த கதையை மெருகேற்றி இப்போது எடுத்து இருக்கிறோம். இதில் கயாடு லோஹர் ஹீரோயின். எனக்கும், துல்கர் சல்மானுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் அடிக்கடி பேசிக் கொள்கிறோம். அதற்கு ஆதாரமாக வாட்ஸ்ஆப் சாட்டை கூட காண்பிக்க தயார். சிலர் இப்படி வதந்தி பரவி சந்தோஷப்படுகிறார்கள். இப்படி பரப்பிவிடுவது ஈஸி. நாங்கள் ஒன்றாக இருக்கும்போது இது போன்ற செய்திகளை படித்து சந்தோஷப்படுவோம்.

உண்மையில் நான் உதவி இயக்குனராக துல்கரின் தீவிரம் படத்தில்தான் பணியாற்றினேன். அவருடன் இன்னொரு படத்தில் வில்லனாக நடித்தேன். லோகா படத்தில் இணைந்தோம். இப்போது அடுத்த பாகம் எடுத்து வருகிறோம். சமீபத்தில் இந்த படத்துக்காக நாங்கள் துபாய் சென்று வந்தோம்'' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எல்ஐகே படத்தின் கதைக்களம் குறித்த தகவல் இதோஎல்ஐகே படத்தின் கதைக்களம் குறித்த ... விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை மணந்தார் நடிகை ஜனனி! விமானி சாய் ரோஷன் ஷாம் என்பவரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap