Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லீடர் இப்படி இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும் : ஐஸ்வர்யா

30 மார், 2026 - 01:34 IST
எழுத்தின் அளவு:
If-the-leader-is-like-this,-the-home-and-the-country-will-be-better-Aishwarya
Advertisement

லெஜண்ட் சரவணன் நடிக்கும் லீடர் படம் ஏப்ரல் 10ல் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் முக்கியமான ரோலில் நடித்துள்ளார் நடிகை லட்சுமி மகளும், பல படங்களில் ஹீரோயினாக நடித்தவருமான ஐஸ்வர்யா. அவர் கூறுகையில் ''இந்த படத்தின் ஹீரோ சரவணன் ரொம்ப நல்ல மனுசன். அதை நானே நேரில் பார்த்து இருக்கிறேன். அவர் சிறந்த தயாரிப்பாளரும் கூட. இந்த படத்துக்காக ஜெய்ப்பூர் போய் இருந்தேன். நல்ல சாப்பாடு, நல்ல சுற்றுலா, என்னை ராணி மாதிரி பார்த்துக் கொண்டார்கள். என்னை மாதிரி நடிகைகளை தங்கம் மாதிரி பார்த்துகிட்ட ஹீரோவுக்கு நன்றி. இப்படிப்பட்ட லீடர் இருந்தால் வீடும், நாடும் நன்றாக இருக்கும், ஜிப்ரான் இசை அருமை.

எனக்கு படங்கள் இல்லாத நிலையில் இந்த பட வாய்ப்பு கிடைத்தது. இந்த பட இயக்குனர் துரை செந்தில்குமாரின் பட்டாஸ் ரொம்ப பிடிக்கும். அதில் அடிமுறை என்ற தற்காப்பு கலையை பற்றி பேசியிருப்பார். இந்த படத்தின் ஹீரோயினாக நடித்த பாயல் ராஜ்புத்துக்கு நன்றி. அவர் அம்மாவாகதான் இந்த படத்தில் நடித்து இருக்கிறேன் என்றார்.

அறந்தாங்கி நிஷா பேசுகையில் ''இந்த படத்தில் நான் மட்டுமல்ல, என் கணவரும் நடித்து இருக்கிறார். வீட்டில் இருப்பது மாதிரி படப்பிடிப்பிலும் அமைதியாக இருந்தார். கடந்த 15 ஆண்டுகளாக அவர் வீட்டிலும் இப்படிதான் ரியாக்சன் இல்லாமல் இருக்கிறார்' என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
2026 சட்டசபை தேர்தல் : களம் இறங்கும் சினிமாகாரர்கள்2026 சட்டசபை தேர்தல் : களம் இறங்கும் ... 50 கோடியை கடந்த ‛யூத்' 50 கோடியை கடந்த ‛யூத்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap