அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் | நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் அறிமுக விழா | பேனர் வைக்க விடாமல் தடுத்தது யார்? மனம் திறப்பாரா கேபிஒய் பாலா | புகழ் நடிக்கும் '4 இடியட்ஸ்' | பூ வச்சது குத்தமாய்யா : நவ்யா நாயருக்கு ரூ.1.14 லட்சம் அபராதம் |
கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த பாலிவுட் திரைப்பட தொழிலாளர்களுக்கு பாலிவுட் நடிகர்கள் ஏராளமான உதவிகள் செய்து வருகிறார்கள். அதில் முன்னணியில் இருப்பவர்கள் அக்ஷய்குமாரும், சோனு சூட்டும். அக்ஷய் குமார் கொரோனா முதல் அலையின்போது சுமார் 30 கோடி வரை நிதி உதவி செய்தார். இரண்டாவது அலையிலும் இதுவரை 5 கோடிக்கு மேல் வழங்கி உள்ளார்.
இந்த நிலையில் திரைப்படத் தொழிலாளர்களுக்கு 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியிருப்பதாவது: கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் சினிமா கலைஞர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. தேவையான தருணங்களில் கலைஞர்கள் நாட்டுக்கு ஆதரவாக நிற்கின்றனர். இந்த முக்கியமான காலகட்டத்தில் மக்கள் முன்வந்து அவர்களுக்குத் துணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.