என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

1996ம் ஆண்டில் கதிர் இயக்கிய காதல் தேசம் படத்தில் அறிமுகமான அப்பாஸ், பின்னர் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, படையப்பா உள்பட பல படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தற்போது ஜி.வி .பிரகாஷ் நாயகனாக நடித்து வரும் ஒரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் அப்பாஸ்.
அதையடுத்து துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கும் ஒரு வெப் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். களவாணி படத்தை இயக்கிய சற்குணம் இயக்கும் இந்த தொடரில் அப்பாஸ் உடன் அதிதி பாலனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரி இந்த தொடரை தயாரிக்கிறார்கள். 2026ம் ஆண்டு அமேசான் பிரைமில் இந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது . விரைவில் இந்த தொடர் குறித்த அதிகாரப்பூர்வ வெளியாக உள்ளது.