Advertisement

சிறப்புச்செய்திகள்

நேசிப்பாயா : ஆகாஷ் முரளி பட டைட்டில் அறிவிப்பு | ஜோடி பொருத்தம் பிரமாதம் : சித்தார்த் - அதிதியை வாழ்த்திய ரேகா | படத்திற்கு படம் எனது வேடத்தில் ஒரு தாக்கத்தை கொடுக்க விரும்புகிறேன் : ஷர்வரி | 4 வருடம் காத்திருந்து தன்மீதே நம்பிக்கை வந்ததும் நடிக்க சம்மதித்த பார்வதி | உன்னி முகுந்தன் படம் மூலம் நடிகராக அறிமுகமாகும் திலகனின் பேரன் | ஐடென்டிடி படப்பிடிப்பை நிறைவு செய்த வினய் ராய் | நாகார்ஜூனாவை தொடர்ந்து தனுஷின் பாடிகார்டும் ரசிகரை தள்ளிவிட்டார் | 106 வயது 'இந்தியன்' தாத்தா : இயக்குனர் ஷங்கர் விளக்கம் | புஜ்ஜியை தேடி வந்த காந்தாரா நாயகன் | மழை பிடிக்காத மனிதனுக்கு 'யுஏ' சான்று |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பணம் கேட்டு தினமும் அடி, உதை : முனீஸ்ராஜாவால் என் மகள் அனுபவித்த சித்ரவதை - ராஜ்கிரண் வேதனை

05 பிப், 2024 - 03:39 IST
எழுத்தின் அளவு:
Daily-beating-and-kicking-for-money:-My-daughters-torture-by-Munisraja---Rajkiran-agony

நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் பிரியா என்கிற ஜீனத்பிரியா. சின்னத்திரை மற்றும் சினிமா நடிகரான முனீஸ்ராஜாவை காதலித்து வந்த பிரியா கடந்த 2022ல் அவரை திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரணை எதிர்த்து இவர்களின் திருமணம் நடந்தது. இதனால் அப்பா - மகள் இடையே அப்போது பிரச்னை எழுந்தது.

சிலதினங்களுக்கு முன் பிரியா வெளியிட்ட வீடியோவில், ‛‛நானும், முனீஸ்ராஜாவும் பிரிந்துவிட்டோம். எங்கள் திருமணம் சட்டபூர்வமானது இல்லை. என்னை மன்னித்து விடுங்கள் அப்பா'' என தெரிவித்திருந்தார்.

பிரியாவின் இந்த வீடியோவிற்கு பதிலளித்துள்ள முனீஸ்ராஜா, இதன் பின்னணியில் யார் இருப்பார் என உங்களுக்கே தெரியும் என ராஜ்கிரண் பெயரை சொல்லாமல் வீடியோவில் தெரிவித்து இருந்தார்.



இந்த விவகாரம் குறித்து நடிகர் ராஜ்கிரணை தொடர்பு கொண்டு கேட்டபோது, தினமலர் இணையதளத்திற்கு அவர் அளித்த பேட்டி : ‛‛பணக்கார குடும்பங்களை குறிவைத்து பணம் பறிப்பது தான் முனீஸ்ராஜா மற்றும் அவனது குடும்பத்தாரின் வேலை. இதற்காக கொல்லிமலை பக்கம் போய் வசியம் செய்யப்பட்ட மருந்து வாங்கி அதை சம்பந்தப்பட்ட பெண்களை சாப்பிட வைத்துவிடுகிறார்கள். அதன்பின் அவர்கள் சொல்வதையே அந்த பெண்களையும் கேட்க வைத்து விடுவார்கள். இப்படி ஏழெட்டு பெண்களிடம் அந்த குடும்பமே பணம் பறித்துள்ளது. இது தான் அவர்களின் வேலை.

இதையெல்லாம் தெரியாமல் என் பொண்ணு போய் மாட்டிக் கொண்டது. அந்த பையனை பிரிந்து 5 மாதம் ஆகிவிட்டது. இப்போ என் பெண்ணை நான் தான் தனியாக வீடு எடுத்து தங்க வைத்து பார்த்து கொள்கிறேன். என் பெண்ணுடன் வாழணும் நினைப்பவன் பெண்ணை ஒழுங்காக வைத்திருக்க வேண்டும். அதை விட்டு பணம் வாங்கிட்டு வா என டார்ச்சர் செய்வது, அடிப்பது என்று இருந்துள்ளான்.



நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். என் எதிர்ப்பை மீறி திருமணம் செய்றீங்க. ஒரு வருடம் நல்லபடியா உன்ன வச்சு அவன் வாழ்ந்தான் என்றால் நான் உன்னை ஏற்றுக் கொள்வேன் இல்லையென்றால் என் முகத்தில் முழிக்காதே என்றேன். அவன் நல்லபடியாக வாழ வைக்கவில்லை. ஆறேழு மாதத்தில் என் மகள் பிரிந்து வந்துவிட்டார்.

முனீஸ்ராஜாதினமும் குடித்துவிட்டு அடிப்பது, கொடுமைப்படுத்துவது என எல்லா டார்ச்சரும் செய்துள்ளான். அவன் மட்டுமல்ல அவன் குடும்பமே இதற்கு உடந்தை. தினமும் குடித்துவிட்டு வந்து அடித்ததால் உடல்ரீதியாக என் மகள் பாதிக்கப்பட்டார். இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டு ரத்த வாந்தி எடுக்கும் அளவுக்கு சித்ரவதை அனுபவித்துள்ளார். இந்த விஷயம் எனக்கு முதலில் தெரியாது. பின்னர் வேறு ஒருவர் மூலம் தெரியவர ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தேன்.

பிரிந்து வந்த பின்னர் முனீஸ்ராஜா மீண்டும் என் மகளுடன் வாழ பேசி உள்ளார். ஏற்கனவே முனீஸ்ராஜா நிறைய திருமணம் செய்துள்ளான். அந்த விஷயம் எல்லாம் என் மகளுக்கு தெரியவர அவர் தெளிவாக பதில் அளித்துவிட்டார். தற்போது என் மகள் மன ரீதியாகவும் பாதிப்பில் உள்ளார். சிகிச்சை எடுத்து வருகிறார்.

இவ்வாறு ராஜ்கிரண் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கிராமி விருது வென்ற 'ஷக்தி' குழுவுக்கு ஏஆர் ரஹ்மான் வாழ்த்துகிராமி விருது வென்ற 'ஷக்தி' ... அந்த கவலை என் வாழ்நாள் முழுக்க இருக்கும் : விஜயகாந்த்திற்கு அஞ்சலி செலுத்திய பின் ரம்பா பேட்டி அந்த கவலை என் வாழ்நாள் முழுக்க ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

chennai sivakumar - chennai,இந்தியா
06 பிப், 2024 - 09:02 Report Abuse
chennai sivakumar பாலும் பழமும் MR Radha மற்றும் சாய்ராம் அவர்கள் காமெடி நினைவுக்கு வருகிறது
Rate this:
R S BALA - CHENNAI,இந்தியா
06 பிப், 2024 - 07:02 Report Abuse
R S BALA அட இதுதான் அந்த கொல்லிமலை ரகசியமா..
Rate this:
வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்
05 பிப், 2024 - 08:02 Report Abuse
வாய்மையே வெல்லும் நாட்டில் பசி பட்டிணியில் தினம்தோறும் சாவு நடக்குது.. ஆனால் பாக்கியம் செஞ்ச சில பேரோ ..கிடைத்ததை சகட்டு மேனிக்கு . தின்றே கொழு கொழு சதையில் ஊறி இருக்கின்றனர்..
Rate this:
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
05 பிப், 2024 - 08:02 Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan இதயம் பாதித்தால் இரத்த வாந்தி வருமா என்ன? நம்பும்படி இல்லையே
Rate this:
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
05 பிப், 2024 - 08:02 Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan உண்மையில் இந்த செய்தி நம் யாருக்கும் தேவையற்றது. இருப்பினும் முனீஸ்ராஜாவையும் பேட்டி எடுத்து செய்தி வெளியிட வேண்டும். ஒரு சார்பு செய்தி மட்டும் வெளியிட்டால் உண்மை தெரியாது. இனி எல்லோரும் கொல்லிமலை சென்று வசிய மருந்து வாங்க விளம்பரம் செய்ததுதான் மிச்சம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in