ஏமாற்றிய 'ஏஸ்', மயக்க வைக்குமா 'மதராஸி' | தமிழில் வரவேற்பு இல்லை என்றாலும் 100 கோடி வசூலில் 'குபேரா' | 'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் |
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் சாய் பிரியங்கா ருத். 'கேளடி கண்மணி' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்தவர் அவ்வப்போது திரைப்படங்களிலும் நடிக்கிறார். இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மெட்ரோ, கேங்ஸ் ஆப் மெட்ராஸ், இரவின் நிழல் படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவர் நடித்துள்ள படம் 'பயமறியா பிரம்மை'. இதில் ஜேடி என்ற புதுமுகத்தின் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் குரு சோமசுந்தரம், ஜான் விஜய், ஹரிஷ் உத்தமன், வினோத் சாகர், ஜாக் ராபின்சன், விஸ்வாந்த், சாய் பிரியங்கா ரூத், திவ்யா கணேஷ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 69 எம்எம் பிலிம் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்த ராகுல் கபாலி இயக்கி உள்ளார்.
படத்தில் நடித்திருப்பது குறித்து சாய் பிரியங்கா ருத் கூறியிருப்பதாவது : ஒன்றரை வருடத்திற்கு பிறகு மீண்டும் திரையரங்கில் வெளியாகும் 'பயமறியா பிரம்மை' எனும் படத்தில் நடித்திருக்கிறேன். இடைப்பட்ட காலத்தில் டிஜிட்டல் தளங்களில் வெளியான படங்களில் நடித்திருக்கிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்தத் திரைப்படம் எனக்கு மறக்க இயலாத அனுபவம். இது போன்ற புதிய முயற்சிகளை பல தடைகளை கடந்து போராடி இப்படத்தை வெளியிடுகிறார்கள். இது போன்ற புதிய முயற்சிகளை இந்த படக்குழு தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதிலும் எனக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். என்றார்.