ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் இரண்டாவது வாரத்திலேயே ஆரம்பமாகும் என்று தகவல் வெளியானது. தேர்தல் முடிவுகள் வந்த ஒரு சில நாட்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். ஆனால் இதுவரையில் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
ரஜினிகாந்த் தான் நடித்து வந்த 'வேட்டையன்' படத்தின் படப்பிடிப்பை அவசரப்படுத்தி முடிக்க வைத்தார். 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத்தான் அப்படி செய்தார் என்றார்கள். இந்நிலையில் 'கூலி' படப்பிடிப்பு தாமதமாகி வருவது குறித்து ரஜினிகாந்த் தனது வருத்தத்தை சற்றே கோபமாக வெளிப்படுத்தியதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்திற்கான திரைக்கதையை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக எழுதி வருகிறார் லோகேஷ். ஆனால், இன்னமும் அதை முடிக்கவில்லையாம். முழு திரைக்கதையையும் படித்துப் பார்க்காமல் வரமாட்டேன் என ரஜினி சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல். இன்னும் சில நாட்களில் அதை முடித்துக் கொடுப்பதாக லோகேஷ் தரப்பிலிருந்து சொல்லப்பட்டுள்ளதாம். அதனால், ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.