''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த் மற்றும் பலர் நடித்துள்ள 'இந்தியன் 2' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. படத்தின் டிரைலரில் கமல்ஹாசன் 'இந்தியன் தாத்தா' வேடத்தில் பல கெட்டப்புகளில் அசத்தியுள்ளார். பறந்து பறந்து சண்டையும் போடுகிறார்.
முதல் பாகமான 'இந்தியன்' படத்தில் சொன்ன அந்த 'இந்தியன் தாத்தா' கதாபாத்திரத்தின்படி தற்போது அவரது வயது 106. இத்தனை வயதைக் கடந்த ஒரு தாத்தா எப்படி சண்டை போட முடியும் என நேற்று மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஷங்கர், “சீனாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாஸ்டர் ஒருவர் இருக்கிறார். அவரது பெயர் லூசி ஜியோன், அவரது வயது 106. அவர் இப்போது மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி மேற்கொள்கிறார். பறந்து அடிப்பார், கிக் செய்வார் எல்லாவிதமான சண்டைகளையும் செய்வார்.
அதுபோல இந்தியன் தாத்தா சேனாபதி கதாபாத்திரமும் ஒரு மாஸ்டர். வர்மக் கலையில் அவர் ஒரு மாஸ்டர். அவரது உணவுப்பழக்கத்தில் கட்டுப்பாடு கொண்டவர். யோகா, தியானம் ஆகியவற்றை தினமும் செய்யும் பழக்கம் கொண்டவர். ஒரு நாளைக்கு ஒரு முறைதான் சாப்பிடுவார். ஒழுக்கம், கட்டுப்பபாடு உங்களது கலையில் நீங்கள் மாஸ்டர் ஆக இருந்தால் வயது ஒரு தடையில்லை. நீங்கள் எந்தவிதமான சண்டையை வேண்டுமானால் செய்யலாம்,” எனக் கூறினார்.