ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
பிரபல ஹீரோக்களை பார்ப்பதற்காக படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டுமல்லாமல் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் தங்களது அபிமான நடிகருடன் புகைப்படம் அல்லது செல்பி எடுத்துக் கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது இயல்பு தான். ஆனால் ரசிகர் கூட்டத்திலிருந்து ஹீரோக்களை பாதுகாப்பதற்காக சுற்றிலும் வரும் பவுன்சர்கள் இதுபோன்ற ரசிகர்களை கட்டுப்படுத்துகிறோம் என்கிற பெயரில் கொஞ்சம் முரட்டுத்தனமாகவே டீல் செய்து வருகிறார்கள். சமீபத்தில் விமான நிலையத்தில் நடிகர் நாகார்ஜூனாவும் தனுஷூம் நடந்து வந்து கொண்டிருந்தபோது நாகார்ஜூனாவுடன் ஒரு ரசிகர் புகைப்படம் எடுக்க வந்த சமயத்தில் நாகர்ஜூனாவின் பாடிகார்ட் அவரை தள்ளிவிட்டார்.
அதை கவனிக்காமல் நாகார்ஜூனா முன்னே சென்று விட்டாலும் அவருக்கு பின்னே வந்த தனுஷ் இதை பார்த்தும் கூட கண்டும் காணாதது போல சென்று விட்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி நாகார்ஜூனா, தனுஷ் இருவர் மீதும் மிகப்பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து நடிகர் நாகார்ஜூனா, இந்த விவகாரம் தற்போது தான் தனது கவனத்திற்கு வந்தது என்றும் இதற்காக தான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் எதிர்காலத்தில் இதுபோல நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் கூறி சர்ச்சையின் தீவிரத்தை குறைத்தார். அது மட்டுமல்ல சமீபத்தில் தன்னுடன் ஆவலாக படம் எடுக்க வந்த ரசிகர்களுடனும் பவுன்சர்களை ஒதுங்கி நிற்க சொல்லிவிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்வு நடந்து இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் தற்போது தனுஷை இதேபோன்று சந்தித்து புகைப்படம் எடுக்க வந்த ரசிகர் ஒருவரை அவரது பாடிகார்ட் தள்ளிவிட்ட அதிர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது. தற்போது தனுஷ் நடித்து வரும் குபேரா படத்தின் படப்பிடிப்பு மும்பை ஜூஹூ பீச் பகுதியில் நடைபெற்று வருகிறது. அப்போது தனுஷ் அங்கே வந்தபோது ஒரு ரசிகர் அவரை நோக்கி செல்பி எடுக்க வர, தனுஷின் பவுன்சர் அவரை தள்ளிவிட்டுள்ளார். இதை தடுக்க தனுஷ் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து தனுஷ் மீண்டும் நெட்டிசன்களின் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளார். ரசிகர்களாக பார்த்து திருந்தும் வரை இது போன்ற சர்ச்சை நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும்.