டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? | சீதையாக நடிப்பதால் 'எல்லம்மா' படத்திலிருந்து விலகிய சாய்பல்லவி | பிளாஷ்பேக் : ஹிந்தி, தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை |
நடிகை பார்வதியை பொருத்தவரை வழக்கமான சினிமா பார்முலாப்படி நடித்திருந்தால் மிகப்பெரிய அளவில் கமர்ஷியல் நடிகையாக மாறி இருப்பார். ஆனால் செலெக்ட்டிவான கதைகளையும், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களையும் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். அதற்கு சமீபத்திய உதாரணம் தான் கடந்த வெள்ளி அன்று மலையாளத்தில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம்.
இந்த படத்தில் அவர் பெரிய அளவில் பிரபலம் இல்லாத இரண்டு நடிகர்களுக்கு ஜோடியாக ஒப்புக்கொண்டு நடித்துள்ளார். அது மட்டுமல்ல இந்த படத்தில் திருமண உறவை மீறி செயல்படும் ஒரு பெண் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் பார்வதி. கொஞ்சம் நெகட்டிவ் சாயல் கொண்ட இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இவர் எப்படி ஒப்புக் கொண்டார் என பலரும் ஆச்சரியப்பட்டனர். இந்த நிலையில் ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக கலந்து கொண்ட பார்வதி இந்த படத்தில் தான் நடித்தது குறித்து ஒரு ஆச்சரியமான தகவலை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “இந்த கதை என்னிடம் வந்த போது இந்த கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியுமா, அதற்கு நியாயம் செய்ய முடியுமா என்கிற சந்தேகமும், தயக்கமும் என்னிடம் இருந்தது. அதனால் நான் ஆரம்பத்தில் நடிக்க மறுத்து விட்டேன். கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் கழித்து இதே கதை மீண்டும் என்னிடமே வந்தது. அப்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவிற்கு எனக்கு பக்குவமும் புரிதலும் ஏற்பட்டிருந்ததால், நம்பிக்கையுடன் சரி என சம்மதம் சொல்லிவிட்டேன். முதல் ஒரு வாரம் இந்த படப்பிடிப்பில் நடித்தபோது இன்னும் இந்த கதாபாத்திரத்திற்கு என்னுடைய நடிப்பால் வலு சேர்க்க வேண்டும் என்கிற என் உணர்வும் ஏற்பட்டது. படத்தில் நடித்து முடிக்கும் வரை பல சவால்களை எதிர்கொள்ளவும் வேண்டி இருந்தது” என்று கூறியுள்ளார்.