அதிகமான பரபரப்பை ஏற்படுத்திய பிரியங்கா, மணிமேகலை சண்டை | இந்த வார ரிலீஸ், யாருக்கு வரவேற்பு? | சமரசம் ஆனதும் வெளிவந்த 'தனுஷ் 52' அறிவிப்பு | மலையாள திரையுலகில் உருவாகிறது புதிய சங்கம்? | மும்பையில் ரூ.30 கோடி மதிப்பில் வீடு வாங்கிய பிரித்விராஜ் | தர்ஷன் இருந்த சிறைப்பகுதியில் சோதனை ; 15 செல்போன், 7 ஸ்டவ், 5 கத்திகள் சிக்கின | கூலி படப்பிடிப்பு தளத்தில் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய ரஜினி | ஓணம் கொண்டாட்டத்தில் மகனை அறிமுகப்படுத்திய அமலா பால் | ஜானி மாஸ்டர் கைது செய்யப்படுவாரா ? | 400 கோடி வசூலைக் கடந்த 'தி கோட்' |
தமிழில் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவரது திருமணம் சமீபத்தில் எளிமையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். சமீபத்தில் தான் தங்களது திருமண நிச்சயதார்த்தத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த காதல் ஜோடியான சித்தார்த், அதிதி ராவ் இருவரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமல்ல நடிகர் ஜெமினி கணேசன் மகளும் பிரபல பாலிவுட் நடிகையுமான ரேகாவும் இந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது சித்தார்த், அதிதி இருவரையும் அருகில் அழைத்து வாஞ்சையுடன் இருவரையும் கைகோர்த்து அணைத்தபடி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார் ரேகா. அதைத் தொடர்ந்து இருவரையும் சுட்டிக்காட்டி இவர்களது ஜோடி பொருத்தம் பிரமாதம் என சைகையாலேயே கூறினார் ரேகா. அதைக் கேட்டதும் அதிதி முகத்தில் அளவற்ற சந்தோசம் பொங்கியதை பார்க்க முடிந்தது. இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.