பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

மறைந்த நடிகர் முரளியின் மகனும், நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் புதிய படத்தை விஷ்ணுவர்தன் இயக்கி வருகிறார். அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா மற்றும் ஆரம்பம் போன்ற படங்களை இயக்கியவர் விஷ்ணுவர்தன். 'ஷெர்ஷா' படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த படத்தில் ஆகாஷ் முரளி நாயகியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். தவிர சரத்குமார், பிரபு, குஷ்பு சுந்தர், கல்கி கோச்லின், ஷிவ் பண்டிட், ஜார்ஜ் கோரா மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்தியாவில் பெங்களூரு மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடந்தது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கேமரூன் பிரைசன் ஒளிப்பதிவு செய்கிறார் தற்போது படத்திற்கு 'நேசிப்பாயா' என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது இளம் காதலர்களின் ஈகோவை மையமாக வைத்து உருவாகி வருவதாக தெரிகிறது.
இதுகுறித்து விஷ்ணுவர்தன் கூறும்போது “நான் அவருக்குள்ளிருக்கும் (ஆகாஷ் முரளி) 'ஸ்டாரைப் பார்க்கிறேன். ஆகாஷ் ஒரு திறமையான கலைஞர். மேலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் தனது நடிப்புத் திறனை மெருகேற்ற நிறைய தயார் செய்துள்ளார். அவரது நடிப்பை திரையில் பார்க்கும் பார்வையாளர்கள் எனது வார்த்தைகளை ஏற்றுக் கொள்வார்கள். இந்த படம் ஒரு அழகான சாகச காதல் கதையாக இருக்கும். இது காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள் மற்றும் காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் பல தருணங்களைக் கொண்டதாக இருக்கும்” என்றார்.