பைக் சாகசம் செய்து வீடியோ வெளியிட்ட பார்வதி | ஜன., 7ல் பாக்யராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ரஜினி பங்கேற்கிறார் | கோல்கட்டாவில் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு சிறந்த நடிகர் விருது | 30 வருடம் கழித்து கேரள துறைமுகத்திற்கு விசிட் அடித்த பம்பாய் படக்குழு | மறைந்த நடிகர் சீனிவாசனின் உண்மையான வயது என்ன? கிளம்பிய விவாதமும் தெளிந்த உண்மையும் | ஜெயிலர் 2வில் பெரிய ரோலில் நடிக்கிறேன் : சிவராஜ்குமார் | உம்மைப் பற்றி பேசாத நாளில்லை : கமல் | ஜனநாயகன் ஆடியோ விழாவில் அரசியல் பேசக்கூடாது : மலேசிய அரசு தடையாம் | ஜனவரி 23-ல் நெட் பிளிக்ஸில் தேரே இஸ்க் மே | ஜனவரி 9ல் ஜனநாயகன், ஜனவரி 10ல் பராசக்தி : என்னென்ன பிரச்னை ஏற்படும் தெரியுமா? |

'மதராசப்பட்டனம்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். லண்டனை சேர்ந்த இவர் படத்திலும் ஆங்கிலேயே பெண்ணாக நடித்தார். அதை தொடர்ந்து தாண்டவம், ஐ, கெத்து, தெறி, 2.0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தில் நடித்து இருந்தார்.
என்னதான் தமிழ் படங்களில் நடித்தாலும் ஒரு ஆங்கிலேயே பெண்ணின் வாழ்க்கையையே எமி வாழ்ந்து வருகிறார். லண்டன் தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். இவர்களுக்கு கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆனது, ஆனால் திருமணம் நடக்காமலேயே இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்பு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்கள்.
கடந்த சில மாதங்களாக பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை காதலித்து வந்தார் எமி ஜாக்சன். அவரையே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அறிவித்தார். சமீபத்தில் எமி ஜாக்சன் மற்றும் எட் வெஸ்ட்விக்கின் நிச்சயதார்த்த விருந்து நடந்தது. தற்போது எமி ஜாக்சன், தனது தோழிகளுக்கு தனி விமானத்தில் பறந்தபடி பேச்சுலர் பார்ட்டி வைத்துள்ளார். இந்த படங்களும், வீடியோக்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.