அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன விஷால் | பிரதீப் ரங்கநாதன் , அட்லி புதிய கூட்டணி! | '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் கேமியோ ரோலில் சோனியா அகர்வால் | 'வாரணாசி' படத்திற்காக அமெரிக்கா பறந்த ராஜமவுலி! | முறுக்கு மீசை, நீளமான முடி புதிய தோற்றத்தில் அருண் விஜய்! | 'ஜெயிலர் 2' படத்தில் எந்தவொரு பாலிவுட் நடிகரும் இல்லை! | முதல்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி! | 'யாமிருக்க பயமே' இயக்குனருடன் கைகோர்க்கும் நித்யா மேனன்! | 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் நாங்கள் எடுத்த ரிஸ்க்: கமல்ஹாசன் | மே மாதப் படங்கள்: 2026ன் முதல் வசூல் வெற்றி |

பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே நடிக்கும் 'கல்கி 2898 ஏடி' படம் வருகிற 27ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் பிரபாஸிற்கு நண்பனாக இருப்பது 'புஜ்ஜி' என்கிற அதிநவீன எதிர்கால கார். இதனை மகேந்திரா நிறுவனம் 10 கோடி ரூபாய் செலவில் உருவாக்கி உள்ளது. இதனை காணவும், ஓட்டி பார்க்கவும் திரை நட்சத்திரங்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புகழ்பெற்ற 'காந்தாரா' படத்தின் இயக்குனரும், நாயகனுமான ரிஷப் ஷெட்டி இந்த காரை ஓட்டி மகிழ்ந்துள்ளார். அதோடு தன் மகனுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இந்த வீடியோவும், படங்களும் தற்போது வைரலாக பரவி வருகிறது.
பிரபாஸிற்கு ரிஷப் ஷெட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பிரபாஸின் மீதான தனது அன்பை வெளிப்படுத்தினார். மேலும் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ரசிக்குமாறும் அவர் ரசிகர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.