குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
பொதுவாக நடிகர்கள் கார் மீதும், நடிகைகள் வளர்ப்பு பிராணிகள் மீதும் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். விதிவிலக்காக சில நடிகைகள் கார் மீது ஆர்வமாக இருப்பார்கள். நடிகர்களில் வளர்ப்பு பிராணிகள் மீது ஆர்வமாக இருப்பவர்களில் முக்கியமானவர் மிதுன் சக்ரவர்த்தி.80 மற்றும் 90களில் டாப்பில் இருந்த அவர் இப்போது ஓய்வெடுத்து வருகிறார்.
நாய்கள் மீது ஆர்வம் கொண்ட மிதுன் சக்ரவர்த்தி 116 நாய்களை மும்பை அருகே உள்ள மட் தீவில் தனக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தில் வளர்த்து வருகிறார். அவர், நாய்களின் பராமரிப்புக்காக 45 கோடி ஒதுக்கி உள்ளார். இந்த வைப்புத் தொகை பணத்தில் இருந்து நாய்களை பராமரிக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதோடு நாய்களுக்கு விளையாட்டு மைதானம், உணவு, சுகாதாரம், மருத்துவ வசதி போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். பாதுகாப்புக்கு பணியாளர்களையும் நியமித்து உள்ளார். இந்த தகவலை மிதுன் சக்கரவர்த்தியின் மருமகளான நடிகை மதால்சா ஷர்மா வெளியிட்டுள்ளார்.
116 நாய்களில் 50 சதவிகிதம் சாலையில் பாராமரிப்பின்றி கிடந்த நாய்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாய்கள் மட்டுமின்றி இனி தத்தெடுக்கப்படும் நாய்களுக்கும் உரிய ஏற்பாடுகளை மிதுன் செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.