பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
பிரபல பாலிவுட் பாடகி அல்கா யாக்னிக். 25 மொழிகளில் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். தமிழிலும் சில பாடல்களை பாடி உள்ளார். ஏக் தோ தீன்', 'சோலி கே பீச்சே கியாஹே' பாடல்கள் மூலம் உலக புகழ் பெற்றார். இந்த நிலையில் 58 வயதான அல்கா தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தியதால் தனது செவித்திறன் திடீரென பாதிக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சில வாரங்களுக்கு முன் விமானத்தில் இருந்து இறங்கும்போது, எதையும் கேட்க முடியாததை உணர்ந்தேன். மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றேன். என்னை பரிசோதித்த மருத்துவர், வைரஸ் தாக்குதலால் உணர்திறன் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பால் செவித்திறன் இழப்புஏற்பட்டதாகத் தெரிவித்தார். சிகிச்சை எடுத்து வருகிறேன். என் ரசிகர்கள் மற்றும் இளம் பாடகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. ஹெட்போன்களில் பாடல்களை அதிக சத்தமாக வைத்து கேட்பதை தவிர்த்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.