2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பாலிவுட் நடிகையும், 'லிங்கா' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவருமான சோனாக்ஷி சின்ஹா திருமணம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அவரது காதலர், நடிகர் ஜாகீர் இக்பாலை நேற்று அவர் திருமணம் செய்து கொண்டார். இந்தத் திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.
“ஏழு வருடங்களுக்கு முன்பு இதே நாளில் (23 ஜூன் 2017), இருவரது கண்களிலும் உண்மையான காதலைப் பார்த்தோம், அதைத் தொடர முடிவு செய்தோம். இன்று அந்த அன்பு அனைத்து சவால்கள் மற்றும் வெற்றிகளின் மூலம் நம்மை வழி நடத்தியுள்ளது. இத்தருணத்திற்கு வழிவகுத்தது. எங்கள் இரு குடும்பங்கள் மற்றும் எங்கள் இரு கடவுள்களின் ஆசீர்வாதத்துடன், நாங்கள் இப்போது கணவன், மனைவியாக மாறியிருக்கிறோம். இனி என்றென்றும் அதே அன்பு, ஒருவரையொருவர் அழகாக்க மற்றும் நம்பிக்கை உடன்,” என இருவரும் தங்களது திருமணம் குறித்து பதிவு செய்துள்ளனர்.
'டபுள் எக்ஸ் எல்' என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது காதல் மலர்ந்தது. சோனாக்ஷி வீட்டில்தான் நேற்று திருமணம் நடைபெற்றது. இருவரது திருமண வரவேற்பு நேற்று மும்பையில் நடைபெற்றது.