கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! |

மோகன்லால் நடிப்பில் கடந்த 1992ல் மலையாளத்தில் வெளியான படம் சதயம். பிரபல எழுத்தாளர் எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய கதையை இயக்குனர் சிபி மலயில் இயக்கியிருந்தார். சதானந்தன் என்கிற தூக்கு தண்டனை கைதி கதாபாத்திரத்தில் மோகன்லால் நடித்திருந்தார். இந்த படத்தில் பெரும்பாலான காட்சிகள் கண்ணூர் சென்ட்ரல் ஜெயிலில் படமாக்கப்பட்டது. அப்போது தூக்குத் தண்டனை கைதியாக நடித்த மோகன்லாலுக்கு தரப்பட்டிருந்த அறை நிஜமாகவே ரிப்பர் சந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் என்கிற இரண்டு கொலை கைதிகள் தங்கி இருந்த அறை தான்.
அது மட்டுமல்ல அந்த படத்தை மோகன்லாலை தூக்கில் போடுவது போல தூக்கு கயிற்றை கழுத்தில் மாட்டிவிடும் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து அதிகாரி ஒருவர் மோகன்லாலிடம் வந்து இப்போது உங்கள் கழுத்தில் மாட்டப்பட்ட கயிறு கூட 13 வருடங்களுக்கு முன்பு ஒருவரை தூக்கில் போட பயன்படுத்தப்பட்ட கயிறு தான் என்று சொன்னதும் மோகன்லால் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். எந்த ஒரு நடிகருக்கும் கிடைக்காத ஒரு அனுபவம் தனக்கு அந்த படத்தில் கிடைத்ததாக மோகன்லால் பின்னர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.