'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | புரமோஷன் மேடையில் கண்கலங்கிய அனுபமா பரமேஸ்வரன் | மகேஷ்பாபு உறவு நடிகையின் கார் மீது பஸ் மோதல் : அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார் | பிளாஷ்பேக் : நிஜமான தூக்குக் கயிற்றை மோகன்லால் கழுத்தில் மாட்டிய இயக்குனர் | இப்ப மிருணாள் தாக்கூர் தான் ஹாட் | ரூ.60 கோடி பண மோசடி : நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்த்ரா மீது வழக்குப்பதிவு |
தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ்பாபுவின் மனைவி நம்ரதா ஷிரோத்கர். இவரது தங்கை ஷில்பா ஷிரோத்கர். பாலிவுட் நடிகையான இவர் தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தற்போது தெலுங்கில் உருவாகி வரும் ஜடாதரா என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் மும்பையில் இவர் பயணித்த கார் மீது அங்குள்ள மிகப் பெரிய நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் கார் விபத்துக்குள்ளானது. காரின் பின்புறம் மிகவும் மோசமான நிலையில் சேதம் அடைந்தது. இது குறித்து மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார் ஷில்பா ஷிரோத்கர்.
அதேசமயம் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவன அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு இந்த விபத்து குறித்து அவர் நியாயம் கேட்டபோது, இந்த விபத்துக்கு அவர்களது நிறுவனம் பொறுப்பேற்காது என்றும், அந்த பேருந்து ஓட்டிய ஓட்டுனர் தான் பொறுப்பு என்றும் அலட்சியமாக பதில் கூறினார்களாம்.
இது குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள ஷில்பா ஷிரோத்கர், “இந்த விஷயத்தில் மும்பை போலீசார் மிகவும் கனிவுடன் அதே சமயம் நியாயமாகவும் நடந்து கொண்டு சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்” என்றும் கூறியுள்ளார்.