சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தெலுங்கு முன்னணி நடிகரான பவன் கல்யாண் முழுநேர அரசியல்வாதியாக மாறி தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இதனை தொடர்ந்து அவர் ஏற்கனவே நடித்து வந்த ஹரிஹர வீர மல்லு, தே கால் ஹிம் ஓஜி ஆகிய படங்களை விரைவாக முடித்துக் கொடுத்து அந்த படங்களும் ரிலீஸ் ஆகி வெற்றியைப் பெற்றன. அடுத்ததாக இயக்குனர் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் நீண்ட நாள் தயாரிப்பாக இருக்கும் உஸ்தாத் பகத்சிங் படத்தை முடித்துக் கொடுக்கும் வேலைகளில் இருக்கிறார் பவன் கல்யாண். இந்தப்படத்தை தொடர்ந்து அவர் தீவிர அரசியலில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் பவன் கல்யாண்.
இந்த படத்தை தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனரான சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார். இவர் மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், ராம்சரண் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்கியவர். கடந்த 2019ல் சிரஞ்சீவி நடிப்பில் வரலாற்று படமாக வெளியான சைரா நரசிம்மர் ரெட்டி படத்தை இயக்கியதும் இவர்தான். கடந்த 2023ல் இவரது இயக்கத்தில் அகில் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான ஏஜென்ட் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இந்த நிலையில் தான் பவன் கல்யாண் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் சுரேந்தர் ரெட்டி.