என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் | வாடிவாசல் : வெற்றிமாறன் பேச்சிலும் குழப்பம் | சிம்புவின் அடுத்தபடம் : வெளியான உறுதியான தகவல் | கவர்ச்சி காட்டாமல் ஜெயித்த நிமிஷா | நடிச்சா ஹீரோ தான்... 3 படங்கள் ஹிட் : பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி | ‛வட சென்னை 2'... தனுஷ் உடன் பிரச்னையா... ‛வாடிவாசல்' டிராப்பா... : வெற்றிமாறன் விளக்கம் | 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாக வதந்திகளை மறுத்த தயாரிப்பாளர் | ஒல்லியானவள் என கிண்டல் அடிப்பவர்களுக்கு சமந்தா சவால் | அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி படத்தைத் தயாரிக்கப் போவது யார் ? | பாரா ஸ்விம்மிங் வீரரை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த் |
சினிமா, சின்னத்திரை இரண்டிலுமே குண்டான பெண்களுக்கு வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினம். அப்படி கிடைத்தால் அது காமெடி கேரக்டருக்காகத்தான் இருக்கும். நடிகை ஊர்வசியின் அக்கா கல்பனா குண்டாக இருந்து சினிமாவுக்கு வந்தவர். அதை அப்படியே தனது பாசிட்டிவாக மாற்றி 200 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சரிதாவும் குண்டு பெண்ணாக சினிமாவுக்கு வந்து சாதித்தவர். தற்போது ஆர்த்தி தனது குண்டான தோற்றத்தை காமெடிக்கு பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இப்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி தொடரில் நடிக்க வந்திருக்கிறார் அஸ்வினி. பெங்களூரைச் சேர்ந்த அஸ்வினி 90 கிலோ எடை கொண்டவர்.
25 வயதாகும் அஸ்வினி, பெங்களூரில் ஐடி கம்பெனியில் உயர் பொறுப்பில் இருக்கிறார். அவரது கணவர் மிதுனும் அதே துறையில் பணியாற்றி வருகிறார். சில வருடங்களுக்கு முன்புதான் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். கன்னட சேனல் ஒன்று நடத்திய ரியாலிட்டி ஷோவில் குடும்பத்துடன் கலந்த கொண்டார் அஸ்வினி. ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலுக்கு குண்டு பெண்ணை தேடிக் கொண்டிருந்தவர்கள். அந்த நிகழ்ச்சியை பார்த்து விட்டு சென்னைக்கு அழைத்து வந்து சீரியல் ஹீரோயினாக்கி விட்டார்கள். குண்டாக பிறந்த பெண் தன்னை நோக்கி வரும் அவமானங்களை தாங்கிக் கொண்டு எப்படி சாதிக்கிறார் என்பதுதான் சீரியலின் கதை.