பிளாஷ்பேக்: வில்லி வேடத்தில் கலக்கிய ஜெயலலிதாவின் சித்தி | டிக்கெட் கட்டண உயர்வை ரத்து செய்தது தெலுங்கானா அரசு | துவங்கியது கன்னட பிக்பாஸ் சீசன் 12 : பிடிவாதம் தளர்த்தி மீண்டும் இணைந்த கிச்சா சுதீப் | புதிய சிக்கல்களில் விஜய்யின் 'ஜன நாயகன்' | துல்கர் சல்மானுக்கு சொந்தமான மூன்றாவது காரை பறிமுதல் செய்த சுங்கத்துறை | புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சூர்யா | மோகன்லாலின் ராவண பிரபு ரீ ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஹைதராபாத்தில் கன்னடத்தில் பேசிய சர்ச்சைக்கு ரிஷப் ஷெட்டி விளக்கம் | ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பும் சோபிதா துலிபாலா | சிரஞ்சீவி குடும்பத்தினர் பார்த்து ரசித்த 'ஓஜி' |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிப்பதாக அறிவிக்கப்பட்ட படம் ‛வாடிவாசல்'. ஜல்லிக்கட்டு தொடர்புடைய படம் என்பதால் ஒரு ஜல்லிக்கட்டு காளையுடன் சூர்யா பயிற்சி எல்லாம் பெற்றார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இந்த படம் ஆரம்பிக்கவே இல்லை. இந்த படம் டிராப் ஆகிவிட்டது என கடந்த சில வாரங்களாக தகவல் பரவி வந்தது.
சூர்யா தரப்பிலிருந்து படத்தின் முழு திரைக்கதையை கேட்டதாகவும், அதை தந்த பிறகு படப்பிடிப்புக்கு போவோம் என சொன்னதாகவும் தகவல் வெளியானது. இது குறித்து வெற்றிமாறன் தரப்பிலிருந்து எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதனிடையே இன்று வெற்றிமாறன் வெளியிட்ட வீடியோவில் வாடிவாசல் குறித்து ஒரு குழப்பமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
அதில், ‛‛வாடிவாசல் நம்ம ரைட்டிங்ல கொஞ்சம் தாமதம் ஆகுது. மேலும் டெக்னிக்கலாகவும் சில சிரமங்கள் உள்ளன. ஆர்ட்டிஸ்ட், விலங்குகள் மற்றும் மற்றவர்கள் பாதுகாப்புக்காக இன்னும் கொஞ்சம் டைம் எடுக்கறதால நாங்க இப்படி ஒண்ணு பண்ணலாம்னு யோசிச்சோம்'' என கூறிவிட்டு சிம்பு படம் பற்றிய பேச்சை தொடர்ந்தார்.
இவரின் பேச்சில் வாடிவாசல் படம் எப்போது துவங்கும் என தெளிவாக குறிப்பிடவில்லை. அவரே கொஞ்சம் குழப்பமாகத்தான் பதில் அளித்துள்ளார். மேலும் இதற்கு பிறகும் சில கேள்விகள் எழுகின்றன. சிம்பு நடிக்கும் படத்தை எடுத்து முடித்து வெளியிட அடுத்த வருடம் ஆகிவிடும். அதற்கு பிறகு வாடிவாசல் எழுதி முடித்து, அதை எடுத்து முடித்து வெளியிட 2027 ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.