நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1944ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட படம், 'ஸ்ரீமுருகன்'. பாகவதரின் நண்பரும் இயக்குநருமான ராஜா சந்திரசேகர் இயக்குவதாகவும் கோவை ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கதை, வசனத்தை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதினார். முருக கடவுள் சூரபத்மனை வதம் செய்த கதை, இதோடு முருகன், வள்ளி காதல் கதையும் இணைத்து எழுதப்பட்டது.
பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' படம் பெரிய வெற்றி பெற்றதால் இந்த படத்திலும் டி.ஆர்.ராஜகுமாரியை தேவயானி கேரக்டருக்கும், வசுந்தரா தேவியை வள்ளி கேரக்டருக்கும் பரிந்துரை செய்தார் பாகவதர். ஆனால் டி.ஆர்.ராஜகுமாரி நடிக்க மறுத்து விட்டார்.
முருகன் கதையில் தேவயானிக்கு பெரிய பங்கு இல்லை என்பதாலும், படத்தில் பாகவதர் ஆதிக்கம் இருக்கும், அவருக்கு பிடித்த மாதிரி நடிக்க வேண்டும் என்பதாலும் அவர் நடிக்க மறுத்ததாக கூறுவார்கள். 'ஹரிதாஸ்' படத்தின்போதே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் சொல்வார்கள்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் தியாகராஜ பாகவதர் சிறைக்குச் சென்றுவிட, படம் நின்றுவிட்டது. பிறகு தியாகராஜ பாகவதரைப் போல நன்றாகப் பாடவும் நடிக்கவும் தெரிந்த பெங்களூரைச் சேர்ந்த ஹொன்னப்ப பாகவதரைத் தேர்வு செய்தனர். ஹொன்னப்ப பாகவதரை இயக்க விருப்பமில்லாத ராஜா சந்திரசேகர் படத்திலிருந்து விலகிவிட்டார்.
இதனால் தயாரிப்பாளர் ஜூபிடர் சோமுவும், எடிட்டரும் நடிகை பானுமதியின் சகோதரி கணவருமான வி.எஸ்.நாராயணனும் இணைந்து படத்தை இயக்கினர். எம்.ஜி.ஆர் தெலுங்கு நடிகை மாலதியுடன் ஆடிய சிவதாண்டவம் இந்தப் படத்தின் ஹைலைட்டாக அமைந்தது.