வசூல் நாயகிகளில் முதலிடம் பிடித்த கல்யாணி பிரியதர்ஷன் | தமிழ் மார்க்கெட்டை பிடிக்கும் மலையாள படங்கள் | மாநாடு கவலை அளிக்கிறது : விஜய்யை தாக்கிய வசந்தபாலன் | 17 ஆண்டு கனவு நனவானது : ஹீரோவான ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்' குமரன் நெகிழ்ச்சி | ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல் | லோகா சாப்ட்டர் 1 சந்திரா படத்திற்கு தனது திரைக்கதையால் வெற்றி தேடித்தந்த நடிகை | பெண் இயக்குனருக்கும், யஷ்க்கும் கருத்து வேறுபாடா? : மலையாள நடிகர் விளக்கம் | தங்கம் கடத்தலில் ஈடுபட்டு சிறையில் இருக்கும் நடிகைக்கு 102 கோடி அபராதம் | குருவாயூரப்பனை தரிசனம் செய்த அக்ஷய் குமார் | இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது ராஜஸ்தானில் எப்ஐஆர் பதிவு |
1983ம் ஆண்டு கமலுக்கும், ரஜினிக்கும் தொடர் வெற்றிப் படங்கள் வெளிவந்தது. கமலுக்கு 'தூங்காதே தம்பி தூங்காதே' ரஜினிக்கு, 'தங்கமகன்' வெள்ளி விழா படங்களாக அமைந்தது. இளமை காலங்கள், மண்வாசனை, உயிருள்ளவரை உஷா படங்களும் சக்கப்போடு போட்டது.
இந்தக் காலகட்டத்தில்தான், ராஜசேகர் இயக்கத்தில், 'மலையூர் மம்பட்டியான்' படம் வெளியானது. மம்பட்டியான் கதாபாத்திரத்தில் தியாகராஜன் நடித்தார். அவரின் ஹேர் ஸ்டைலும், தாடியும், கண்களும் அவரது குரலும் மம்மட்டியான் கேரக்டருக்கு கச்சிதமாக அமைந்தது.
படத்தின் நாயகி சரிதா. மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருப்பார். கரகாட்ட கலைஞராக சில்க் சுமிதா கவர்ச்சியாகவும், கண்ணீரை வரவழைக்கும் முடிவாகவும் நடித்திருந்தார். கவுண்டமணியின் வில்லத்தனம் ரசிக்க வைத்தது. இளையராஜாவின் இசையில் எல்லாப் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே மாதிரியான படங்கள் வந்தது. கொம்பேரி மூக்கன், கும்பக்கரை தங்கையா, கரிமேடு கருவாயன், கோவில்பட்டி வீரலட்சுமி என நாட்டுப்புற சாகச கதைகள் படமானது.