நாம ‛குட்'-ஆ இருந்தாலும் உலகம் ‛பேட்'-ஆக்குது : குட் பேட் அக்லி டீசர் வெளியானது | வாரிசு பட நடிகையான சம்யுக்தா விவாகரத்து | சசிகுமார் படத்தில் பரத் | கிங்ஸ்டன்-ல் விஷுவல் டிரீட் : திவ்ய பாரதி | தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் |
எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது “அக்னி பிரவேசம்” என்ற சிறுகதை, “சில நேரங்களில் சில மனிதர்கள்” என்ற நாவல் இரண்டினையும் இணைத்து அதற்கு 'ட்ரீட்மெண்ட்' எழுதி, ஒரு ஸ்கிரிப்ட் தயார் செய்து கொடுக்க, இயக்குநர் ஏ பீம்சிங் அதனைத் தயாரித்து இயக்கியிருந்த திரைப்படம்தான் “சில நேரங்களில் சில மனிதர்கள்”.
ஒரு பலவீனமான நேரத்தில் யாரோ ஒருவனிடம் தன்னையிழந்து, பின் தன்னம்பிக்கையோடு படித்து முன்னேறி பணிபுரிந்து கொண்டிருக்கும் நாயகி ஒருநாள் அந்த யாரோ ஒருவனை மீண்டும் சந்திக்கும் நிலை ஏற்பட்டு, அவனை தன் நண்பனாக பாவித்து வாழும் கங்கா என்ற கதாபாத்திரத்தில் நடிகை லட்சுமியும், பிரபு என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகாந்தும் நடித்திருந்தனர். முதலில் இந்த கதாபாத்திரங்களின் தேர்வாக இருந்தவர்கள் ஜெயலலிதாவும், நடிகர் ஆர் முத்துராமனும்தான். பின் ஜெயகாந்தனின் விருப்பத்திற்கிணங்க நடிகை லட்சுமியும், நடிகர் ஸ்ரீகாந்தும் தேர்வாயினர்.
நான் கதை எழுதுகிறவன் மட்டுமல்ல, லைப்ரரியின் அட்டெண்டர் மட்டுமல்ல, அம்மன் சிலைபோல் இருக்கின்ற ஒரு பெண்ணின் கணவன். விக்ரகம்போல் இருக்கும் ஒரு பெண்ணின் தகப்பன். எனக்கா சமூகப் பொறுப்பில்லை என்கிறீர்கள்? என்று கேட்கும் எழுத்தாளர் ஆர் கே வியாக நடிகர் நாகேஷூம், உறவையும், செய்த உதவியையும், கங்காவின் வாழ்வில் என்றோ நடந்தேறிய அந்த விபத்தையும், தனது வயதினையும் சலுகைகளாக எடுத்துக் கொண்டு கங்காவிடம் வேறு ஏதோ ஒன்றை எதிர்பார்க்கும் வெங்கு மாமா என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஒய் ஜி பியும் அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இத்திரைப்படத்தில் நடித்தமைக்காக அகில இந்திய சிறந்த நடிகைக்கான தேசிய விருதினை தட்டிச் சென்றார் நடிகை லட்சுமி. 1977ம் ஆண்டு ஒரு கலைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளிவந்த இத்திரைப்படம், தமிழகத்தில் 100 நாள்களைக் கடந்து ஓடிய முதல் கலைப்படம் என்ற பெருமைக்கும் உரியதானதுதான் இந்த “சில நேரங்களில் சில மனிதர்கள்” திரைப்படம்.