கார்த்தியுடன் மூன்றாவது முறையாக இணையும் ரஜிஷா விஜயன் | பிளாஷ்பேக்: தீய செயலைக் கூட தூய செயலாய் மாற்றிக் காட்டிய மக்கள் திலகத்தின் “ஒளிவிளக்கு” | மீண்டும் சினிமாவில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன்! - சிவராஜ்குமார் வெளியிட்ட தகவல் | ஜனநாயகன் படத்தில் புரட்சிகரமான வேடத்தில் விஜய்! | மோகன்லால்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன் | தனுஷிற்கு ஜோடி கிர்த்தி சனோன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கார் விபத்தில் உயிர் தப்பிய இமான் அண்ணாச்சி! | ரவி மோகன் படம் : விலகிய ஹாரிஸ் ஜெயராஜ், இணைந்த சாம் சிஎஸ் | மாதவன், கங்கனா படத்தில் கவுதம் கார்த்திக் | இரவு 11 முதல் காலை 11 மணி வரை: சிறார்களுக்கு தியேட்டர்களில் அனுமதி இல்லை: தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு |
1939ல் தனது 17வது வயதில் தமிழ் திரை உலகில் நுழைந்தார் டி.ஆர்.ராஜகுமாரி. அவரது முதல் படம் 'குமார குலோத்துங்கன்'. இதில் டி.ஆர்.ராஜாயி (தஞ்சாவூர் ரங்கநாயகி ராஜாயி) என்ற பெயரில் அறிமுகமானார். அப்படியே விளம்பரமும் செய்யப்பட்டது. ஆனால் அந்த பெயர் ஏனோ இயக்குனர், ராஜாராவுக்கு பிடிக்கவில்லை. படம் வெளியாகும்போது பெயரை டி.ஆர்.ராஜலட்சுமி என்று மாற்றினார். இந்த படம் பல பிரச்னைகளில் மாட்டி 2 வருடங்கள் படப்பிடிப்பு நடந்தது. படம் வெளியாகி தோல்வி அடைந்தது.
முதல் படம் ராசியில்லை என்று கருதிய டி.ஆர்.ராஜலட்சுமி அடுத்த படமான 'கச்சதேவயானி' படத்திற்கு டி.ஆர்.ராஜகுமாரி என்று பெயரை மாற்றினார். அதோடு அப்போது டி.பி.ராஜலட்சுமி பாப்புலராக இருந்ததால் பெயர் குழப்பம் வரும் என்பதற்காகவும் தனது பெயரை டி.ஆர்.ராஜகுமாரி என்று மாற்றினார். பெயர் காரணமா என்று தெரியவில்லை 'கச்சதேவயானி' படம் சூப்பர் ஹிட் ஆனது. அதை தொடர்ந்து அவர் தியாராஜ பாகவதர் ஜோடியாக 'ஹரிதாஸ்' படத்தில் நடித்தார். 'தீபாவளி டூ தீபாவளி' என ஒரு வருடம் படம் ஓடியது. இந்த பெயர் ராசிக்காக கடைசிவரை தனது பெயரை டி.ஆர்.ராஜகுமாரி என்றே வைத்துக் கொண்டார்.