பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிக்க கடந்த ஆண்டில் வெளிவந்து 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'கல்கி 2898 ஏடி'.
இப்படத்தின் முதல் பாகத்தைப் படமாக்கிய போதே இரண்டாம் பாகத்திற்கான 60 சதவீத வேலைகளை முடித்துவிட்டதாகப் படத்தின் தயாரிப்பாளர் அஸ்வினி தத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இருந்தாலும் மீதமுள்ள படத்திற்கான படப்பிடிப்பு எப்போது ஆரம்பமாகும் என்பது தெரியாமல் இருக்கிறது.
பிரபாஸ் தற்போது 'தி ராஜாசாப்' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். அதோடு 'பாஜி' படத்திலும் நடித்து வருகிறார். இவற்றிற்கு அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'ஸ்பிரிட்' படத்தில் நடிக்க உள்ளார். அடுத்தடுத்து அவர் புதிய படங்களில் நடிக்க உள்ளதால் 'கல்கி' இரண்டாம் பாகம் கைவிடப்பட்டதாக சிலர் வதந்திகளைப் பரப்பினார்கள். ஆனால், அவற்றை மறுத்துள்ளார் தயாரிப்பாளர் அஸ்வினி. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார் 2' படத்தின் படப்பிடிப்பும் எப்போது ஆரம்பமாகும் என்பதும் தெரியாமல் உள்ளது. ஒரு பரபரப்புக்காக இரண்டாம் பாகம் என அறிவித்துவிடுகிறார்கள். ஆனால், குறித்த இடைவெளியில் அதை முடித்து வெளியிடாமல் இழுத்து வருகிறார்கள் என்பது திரையுலகினர், ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத் தருகிறது.