இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
வட சென்னை 2, தனுஷ் உடன் சண்டை, வாடிவாசல் டிராப் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஒரு வீடியோ மூலமாக தெளிவுப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதில் அவர் கூறியதாவது...
கடந்த சில நாட்களாக என்னை பற்றி, வட சென்னை பட விவகாரம் குறித்து, தனுஷ் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வருகின்றன. யு-டியூப்பில் சிலர் அதை கடுமையான மொழிகளில் சொல்லியிருக்கிறார்கள். அதனால், இந்த விளக்கம் விளக்கம் அளிக்கிறேன். என்னுடைய அடுத்த படத்தை எஸ்.தாணு தயாரிக்கிறார். சிம்பு நடிக்கிறார். ஆனால் அது வட சென்னை 2 படமல்ல. அதேசமயம் அந்த படக்கதை வட சென்னை பின்னணியில் நடக்கிறது.
வட சென்னை படத்தின் சில கேரக்டர்கள், பின்னணி அதில் வரலாம். வட சென்னை 2 என்பது கண்டிப்பாக தனுஷை வைத்துதான் உருவாக்க முடியும். வட சென்னை அன்பு கேரக்டர் எழுச்சி தனுஷ் தான் நடிக்க முடியும். காரணம், படத்தின் ரைட்ஸ் அவரிடம்தான் இருக்கிறது. வாடிவாசல் படத்துக்கு பல வேலைகள் பாக்கி என்பதால் அது தள்ளிப்போகிறது. தாணு தான் சிம்புவுடன் பேசுங்க என்றார். உடனே பேசினேன். இந்த பட வேலைகள் தொடங்கினேன்.
எனக்கும், தனுசுக்கும் இடையே வட சென்னை விஷயத்தில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சண்டை இல்லை. இது குறித்து அவரிடம் பேசியபோது கிரியேட்டராக நீங்கள் உங்களுக்கு விருப்பமானதை பண்ணுங்கள். வட சென்னை கதை விஷயத்தில், என் டீமுடன் பேசிவிட்டு, பணம் வாங்காமல் ஒப்புதல் தருகிறேன் என்றார்.
வட சென்னை படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் அவரிடம்தான் காப்பிரைட் உள்ளது. அவர் அந்த படத்தின் வேறு பாகம் எடுக்க பணம் கொடுங்கள் என்று கேட்பது சரியானது. நான் என் தரப்பு விஷயங்களை அவரிடம் பேசினேன். அவர் எந்த எதிர்ப்பும் சொல்லவில்லை. மேலும், சிம்புவுடன் நீங்கள் இணைந்தால் அந்த படம் நன்றாக இருக்கும், வித்தியாசமாக இருக்கும். சிம்புவுக்கும் புது அனுபவமாகக இருக்கும் என தனுஷ் உற்சாகம் கொடுத்தார்.
என்னுடைய பல பொருளாதார பிரச்னைகளில் தனுஷ் உதவி இருக்கிறார். சமீபத்தில் கூட உதவினார். அவருக்கும் எனக்கும் எந்த பிரச்னையும் இல்லை. சிம்புவிடம் பேசியபோது வட சென்னை குறித்து பல தகவல்கள் வருகிறது. உங்களுக்கும், தனுசுக்கும் எந்த பிரச்னையும் வராதபடி படம் பண்ணுங்க. நீங்க சொல்கிற கதையில் நான் நடிக்கிறேன், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றார். சிம்புவும், தனுசும் நல்ல நட்பில் இருக்கிறார்கள்'' என்றார்.
இதனால், சில வாரங்களாக நிலவி வந்த வட சென்னை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது.