ஜனநாயகன் மறு தணிக்கை 2வது முறை ரத்து | மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி உடைகிறதா? | நயன்தாராவை உட்படுத்தி சர்ச்சை கருத்து: நடிகர் சங்கம் கண்டனம் | மோகன்லாலின் 'திரிஷ்யம்-3' படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்! | திரிஷா மிகவும் கண்ணியமானவர்! -சொல்கிறார் குஷ்பு | 100 கோடியை எட்டிப்பிடிக்குமா ராதிகா சரத்குமாரின் 'தாய் கிழவி'? | ரஜினிகாந்த் Vs விஜய் : வெளிப்படை மோதல் ஆரம்பம் | நயன்தாரா பற்றி சர்ச்சை பேச்சு : வருத்தம் தெரிவித்த சிவி சண்முகம் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே பாலசந்தரை நிரந்தர சினிமா இயக்குநராக மாற்றிய “நீர்க்குமிழி” | 'சேயோன்' படத்தில் 'விருமாண்டி'-ஆக தொடரும் கமல்ஹாசன் |

தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடிகராக மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தியிலும் நேரடிப் படங்களில் நடித்து பான் இந்தியா பிரபலமாக உள்ளவர் தனுஷ்.
இந்தியத் திரையுலக இசையமைப்பாளர்களில் ஜாம்பவனாக இருக்கும் இளையராஜாவின் பயோபிக் படம் கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. அவரது கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்க, சில அருமையான போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. அருண் மாதேஸ்வரன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு படம் இரண்டு வருடங்களாகியும் ஆரம்பமாகாமல் உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்படத்திலிருந்து அருண் விலகியதாகத் தகவல் வெளிவர, படக்குழு அதை மறுத்தது. அதனால், இளையராஜா பயோபிக் படம் பற்றி மீண்டும் செய்திகள் வர ஆரம்பித்தன. இப்படம் அடுத்த ஆண்டு 2027ல் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
அருண் தற்போது இயக்கி வரும் 'டிசி' படத்தையும், தனுஷ் அவரது 55வது படத்தையும் முடித்துவிட்டு இளையராஜா பயோபிக் படத்திற்கு வருவார்களாம்.
அதற்கடுத்து முன்னாள் ஜனாதிபதி மறைந்த அப்துல் கலாம் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இப்படத்தின் அறிவிப்பு 2025ம் ஆண்டு வெளியானது. படப்பிடிப்பு 2028ல் ஆரம்பமாக உள்ளதாம். அடுத்தடுத்து இரண்டு பயோபிக் படங்களில் நடிக்க உள்ளார் தனுஷ்.
இளையராஜா, அப்துல் கலாம் இருவருமே தமிழகத்தில் பிறந்து உலகப் புகழ் பெற்றவர்கள் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இருவரது பயோபிக்கிலும் தனுஷ் தான் நாயகன். யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு.