பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‛டிராகன்' படம் சூப்பர் ஹிட்டானது. 150 கோடிக்கு மேல் வசூலித்து இந்தாண்டில் அதிக லாபம் தந்த படமாக அமைந்தது. இந்த படத்தின் 100வது நாள் விழா சென்னையில் நடந்தது.
விழாவில் பேசிய ஹீரோ பிரதீப் ரங்கநாதன் ''எனக்கும், இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துக்கும் இடையே பல ஆண்டுகள் பழக்கம். அவர் ஓ மை கடவுளே படம் இயக்கும்போது சின்ன ரோல் தர்றேன்னு சொன்னார். ஆனால், நான் காதல் படத்துல ஒரு கேரக்டர் பேசுறது மாதிரி ''அமெரிக்க மாப்பிள்ளை, வில்லன் ரோல் பண்ண மாட்டேன். நடித்தால் ஹீரோவாகதான் நடிப்பேன்னு சொன்னேன். அதற்கான முயற்சிகளில் இறங்கினேன். நான் இயக்கிய கோமாளி ஹிட்டானது. அடுத்து நான் நடித்து இயக்கிய லவ் டுடே ஹிட் ஆக, நானும், அவரும் இணைந்து டிராகன் பண்ணினோம். இந்த படமும் ஹிட். ஒருவகையில் நான் பங்குபெற்ற கோமாளி, லவ்டுடே, டிராகன் படங்கள் 100வது நாளை கொண்டாடி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி உடன் இந்த படக்குழுவுக்கும், எனக்குமான உறவு முடிவடைகிறது. அடுத்து ஏதாவது விருது வழங்கும் விழாவில் நாங்கள் சந்திக்கலாம்' என்றார்.
மேடையில் பிரதீப் ரங்கநாதன் தோற்றத்தை பேச்சை பார்த்தவர்கள் அப்படியே தனுஷ் மாதிரியே மாறுகிறார் என்று கமென்ட் அடித்தனர். அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐகே, கீர்த்திவாசன் இயக்கும் டியூட் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன்.
நானும் ரவுடிதான் படத்தின் மூலம் தனுஷால் பிரபலமாக்கப்பட்டவர் விக்னேஷ் சிவன். அந்த படத்தில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இப்போது தனுஷ் போட்டியாளர் என கருதப்படும் பிரதீப் ரங்கநாதன் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருவதால், அதற்கு பின்னால் பல கணக்குகள் சொல்லப்படுகின்றன.