திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஆளுங்கட்சி தலையீடு: தயாரிப்பாளர்கள் குமுறல் | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் |

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா நடித்த ‛டிஎன்ஏ' படம் வெற்றி பெற்றுள்ளது. ஆரம்பத்தில் குபேரா காரணமாக, இந்த படம் சற்றே திணறினாலும், அடுத்த நாட்களில் தியேட்டர் அதிகரிக்கப்பட்டு, வெற்றி பாதையில் செல்ல ஆரம்பித்துவிட்டது. கடந்த வாரம் 5 படங்கள் வெளியான நிலையிலும் டிஎன்ஏவுக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இதனால் அதர்வா மார்க்கெட் சீராகி உள்ளது.
இந்நிலையில், படக்குழு சார்ஜாவுக்கு சென்று வெற்றியை கொண்டாடியுள்ளது. அதர்வாவுக்கு அரபு நாடுகளில் அவ்வளவு ரசிகர்களா என்று விசாரித்தால், ஹீரோயின் நிமிஷா மலையாளத்தில் பிரபலமான நடிகை. அரபு நாடுகளில் எக்கசக்க மலையாளிகள் இருக்கிறார்கள். அதனால், அங்கே சென்று படத்தை விளம்பரப்படுத்தியுள்ளனர். அதற்கேற்ப செண்டை மேளம் அடித்து சார்ஜாவில் சந்தோஷத்தை பதிவு செய்துள்ளார் அதர்வா.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளுக்குபின் கவர்ச்சி காண்பிக்காமல் நடிப்பால் பிரபலமாக உள்ள, பேசப்படுகிற நடிகையாகி உள்ளார் நிமிஷா என்கிறார்கள். சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், டிஎன்ஏ என 3 வெற்றி படங்களை அவர் கொடுத்துள்ளார். 3 படங்களிலும் அவர் நடிப்பு பேசப்பட்டுள்ளது. அவரோ, எனக்கு தமிழில் நிறைய வாய்ப்புகள் தாருங்கள். நான் நடிக்க ரெடி என்று வாய் விட்டு பலரிடம் கேட்கிறாராம்.