பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

விஜய் நடித்து ஜனவரி 9ம் தேதி வெளியாக வேண்டிய 'ஜனநாயகன்' படம் தணிக்கை விவகாரத்தால் தள்ளிப் போய் உள்ளது. படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை. அப்படத்தைத் தயாரித்துள்ள கர்நாடகாவைச் சேர்ந்த கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள கன்னடம் மற்றும் ஆங்கிலப் படம் 'டாக்சிக்'. யஷ் நடித்துள்ள இந்தப் படம் மார்ச் மாதம் 19ம் தேதி பான் வேர்ல்டு படமாக வெளியாக உள்ளது.
கேஜிஎப் 1 மற்றும் 2 படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடமும் வரவேற்பைப் பெற்றவர் யஷ். மேலும் இப்படத்தின் நயன்தாரா உள்ளிட்ட சில ஹீரோயின்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்குத் தமிழிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'ஜனநாயகன்' படத்தை வெளியிடுவதற்காக வாங்கிய வினியோகஸ்தர்கள் படம் வெளியாகாத காரணத்தால் தவித்து வருகின்றனர். அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் 'டாக்சிக்' படத்தின் வினியோகத்தை அவர்களுக்குத் தர கேவிஎன் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் படம் வராத காரணத்தால் விரக்தியில் இருக்கும் அவர்களுக்கு இப்படி ஒன்று கிடைத்தால் அது அந்த விரக்திக்கு 'டானிக்' கிடைத்தது போல இருக்கும்.