படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
கேரளாவை சேர்ந்த நடிகை ஆயிஷா ஜீனத், தமிழில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார். மாயா, பொன்மகள் வந்தாள், செம்பருத்தி, ராஜமகள் உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ளார். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சிறப்பு பங்கேற்பாளராகவும் இருந்திருக்கிறார். 'உப்பு புளி காரம்' என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். இது தவிர பல குறும்படங்களிலும், இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் ஆயிஷா தனி பிரைவேட் ஜெட் விமானம் வாங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆயிஷா தனி பிரைவேட் ஜெட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து 'தனிமையில் இருங்கள்' என்று பதிவிட்டிருக்கிறார். இதை வைத்துக் கொண்டு அவர் தனி ஜெட் விமானம் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
ஆயிஷா பெரிய தொழில் அதிபர் ஒருவரை ரகசிய திருமணம் செய்துள்ளார் அவர் வாங்கிக் கொடுத்த விமானம்தான் இது என்றும், அவர் சும்மா பப்ளிசிட்டி தேடுகிறார் என்றும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.