ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! |

பெங்களூரு: கர்நாடகவில், தமிழ் 'டிவி சீரியல்' நடிகை நந்தினி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், விஜயநகரா மாவட்டம், கோட்டூரை சேர்ந்தவர் நந்தினி, 26. இவர் பெங்களூரு கெங்கேரியில், தங்கும் விடுதியில் வசித்து வந்தார். கன்னட, 'டிவி சீரியல்'களில் துணை நடிகையாக நடித்து வந்த இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
தமிழில், 'கவுரி' என்ற சீரியலில், துர்கா - கனகா என இரு வேடங்களில் ஓராண்டாக நடித்து வந்தார். சில நாட்களுக்கு முன், சென்னையில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்றார். சமீபத்தில் பெங்களூரு திரும்பி விடுதியில் தங்கியிருந்தார்.
இந்நிலையில், கவுரி சீரியல் குழுவினர் நேற்று முன்தினம் நந்தினியை தொடர்பு கொண்டனர்; அவர் போனை எடுக்கவில்லை. எனவே, விடுதி மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.
அவர், நந்தினி அறைக்கு சென்று பார்த்தபோது, துாக்கில் தொங்கிய நிலையில் நந்தினி சடலமாக கிடந்தார். கெங்கேரி போலீசார், அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலைக்கு முன், தாயாருக்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் உள்ள விபரங்களை கூற போலீசார் மறுத்து விட்டனர்.