தமிழில் வெளியாகும் கன்னட படம் | பிஸியான கோமல் சர்மா | ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா? | பில்கேட்சை சந்தித்த மகேஷ்பாபு | இந்தியாவின் மிஸ்டர்.கிளீன் : சினிமா ஆகிறது வாஜ்பாய் வாழ்க்கை | பாலிவுட்டில் அறிமுகமாகும் மதுமிதா, அர்ஜூன்தாஸ் | அம்மன் தொடருக்கு விரைவில் எண்ட் கார்டு? | ஆர்ஜே ஆனந்தியை கலாய்க்கும் நெட்டிசன்கள் | மருத்துவமனையில் பாண்டியன் ஸ்டோர் ஹேமா - என்ன ஆச்சு? | ரசிகர்களுக்காக முடிவை மாற்றிய சிபு சூரியன் |
விஜய் டிவி சின்னத்திரை நட்சத்திரங்களுக்கிடையே தனக்கான இடத்தையும் பதிவு செய்து பிரபலமாகியுள்ளார் காவியா. பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவுமணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவியா, அதன்பின் பாண்டியன் ஸ்டோர்ஸில் மறைந்த நடிகை சித்ராவின் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.
இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் காவியா ரசிகர்களின் கனவுகன்னி லிஸ்டிலும் இடம் பிடித்துவிட்டார். இவருக்கு தற்போது சினிமா வாய்ப்புகள் கதவை தட்டி வருகின்றன. ஏற்கனவே பரத் - வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காவியா நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக கவின் ஹீரோவாக நடிக்கும் ஊர்க்குருவி என்கிற படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனையடுத்து காவியாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.