ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் குடும்பங்கள் கொண்டாடிய சூப்பர் ஹிட் தொடராக அமைந்தது. அந்த தொடரின் முடிவுக்கு பின் தற்போது சீசன் 2 ஒளிபரப்பாகி வருகிறது. இருந்தாலும் முதல் சீசன் அளவுக்கு மக்களை அது கவரவில்லை.
இந்நிலையில், முதல் சீசனில் நடித்த சுஜிதா, சரவண விக்ரம் மற்றும் காவ்யா அறிவுமணி ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பிற ரீ-யூனியன் ஆகியுள்ளனர். உணவகம் ஒன்றில் சந்தித்து கொண்ட மூவரும் அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகின.