ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார் ஹேமா. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலும் நடித்து வருகிறார். முன்னதாக சில சினிமாக்களிலும் நடித்த ஹேமா திரையுலகில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து அண்மையில் பகிர்ந்துள்ளார். அதில், 'நான் சின்னத்தம்பி சீரியலில் நடித்து கொண்டிருந்தபோது ஒரு படத்தில் கமிட் ஆகியிருந்தேன். அப்போது சில நாட்களிலேயே எனது சம்பளத்தில் மாற்றத்தை செய்திருந்தார்கள். அந்த சம்பளத்தில் என்னால் நடிக்க முடியாது என கூறினேன். ஆனால், அவர்கள் உன் மூஞ்சிக்கு வாய்ப்பு கொடுத்ததே பெரிது. இதில் சம்பளம் போதாதா? என மோசமாக நடத்தினார்கள். எனக்கு கோபம் வந்துவிட்டது. என் மூஞ்சுக்கு அந்த வாய்ப்பு பெரிது என்றால் வேறு எந்த மூஞ்சுக்கும் அந்த வாய்ப்பு செட்டாகது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். அதன்பிறகு அந்த படமும் டிராப் செய்யப்பட்டது. இப்படி சினிமாவில் சிலமுறை அவமானங்களும் எனக்கு ஏற்பட்டதுண்டு' என அந்த பேட்டியில் ஹேமா கூறியிருக்கிறார்.