இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
தமிழ் ரசிகர்களை மிகவும் கவரந்து நம்பர் 1 சீரியலாக வலம் வந்து கொண்டிருக்கிறது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கதாநாயகி கண்ணம்மாவாக நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரோஷினி. இந்நிலையில் சீரியலில் வெண்பாவுக்கும் கண்ணம்மாவுக்கும் இடையே நடக்கும் போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. சீரியலும் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸை எட்டிவிட்டது. இந்நிலையில் கதாநாயகி ரோஷினி தொடரை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியாகி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தற்போது தெரியவரும் தகவலின் படி அடுத்த இரண்டு வாரங்கள் மட்டுமே ரோஷினி கண்ணம்மாவாக நடிப்பார் என்றும் அதன் பின் அந்த கதாபாத்திரத்தில் வேறு நடிகை நடிக்கப் போகிறார் எனவும் செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எங்கும் வெளியிடப்படவில்லை என்பதால் உண்மையில் ரோஷினி சீரியலை விட்டு விலகுவாரா? இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.