'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

கடந்த சில வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மெகாதொடர் 'மகாநதி'. இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் இளம் நடிகை ஷாதிகா. இவர் 'நான் மகான் அல்ல, நெஞ்சில் துணிவிருந்தால்' உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது ஷாதிகா அளித்த பேட்டியில், மகாநதி தொடரில் நடித்தபோது இருந்த தயக்கம் குறித்து அவர் கூறியதாவது, "மகாநதி சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் கமிட் ஆகும் போது எனக்கு இது இவ்ளோ பெரிய நெகட்டிவ் கதாபாத்திரம் என தெரியாது. நான் சீரியலில் நடிக்கும் போது இந்த மாதிரி யாரும் என்னை மோசமாக திட்டியதில்லை. திடீரென்று அவ்வளவு வெறுப்பு பார்க்கவும் ரொம்ப பயந்துட்டேன். இது நமக்கு செட் ஆகுதா, இல்லையா என குழப்பமா இருந்தது. நான் ரொம்ப சென்சிடிவ் ஆன கேரக்டர். சமூக வலைதளங்களில் கமென்ட்களை படித்துவிட்டுச் இயக்குனர் பிரவீன் சார்கிட்ட சீரியலில் இருந்து விலகிக்கிறேன் என்றெல்லாம் கூறினேன். அவர், கமென்ட் எல்லாம் மனதில் வச்சுகாதீங்க விடுங்க என கூறி என்னை ஆறுதல் படுத்தினார்" எனக் கூறினார்.




