'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இயல்பான நடிகை எனப் பெயரெடுத்தவர் தமிழ் நடிகையான சாய் பல்லவி. தமிழ் சினிமாவை இவரை இன்னும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், தெலுங்கில் இவருக்கு சவாலான கதாபாத்திரங்கள் கிடைத்து அங்கு முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
நீலகிரியைச் சொந்த ஊராகக் கொண்ட சாய்பல்லவி அவருடைய தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். “வேர்கள், தாத்தாவின் 85வது,” எனக் குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் தாத்தா, பாட்டி, தங்கை ஆகியோரது புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.
தாத்தாவின் 85வது பிறந்தநாளைக் கொண்டாடிய சாய்பல்லவிக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். அவரது பதிவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளார்கள்.
நெற்றியில் திருநீறு, தலையில் முல்லைப்பூவுடன், புடவையில் நமது பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றமளிக்கும் சாய் பல்லவியைப் பார்க்கும் போது 'ரவுடி பேபி' பாடலில் அப்படி ஆடியவரா இவர் என ஆச்சரியப்பட வைக்கிறார்.
விரைவில் தமிழ்ப் படம் ஒன்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமையட்டும்.