2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட், அஜய் தேவகன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பிற்காக படக்குழுவினர், இரு தினங்களுக்கு முன்பு உக்ரைன் புறப்பட்டுச் சென்றனர். அங்கு இன்று முதல் அடுத்த பத்து நாட்களுக்கு படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
ஒரு பிரம்மாண்ட பாடல் காட்சியை அங்கு படமாக்க இயக்குனர் ராஜமவுலி திட்டமிட்டுள்ளாராம். ஜுனியர் என்டிஆர், ராம்சரண் இருவரும் அந்தப் பாடல் காட்சியில் நடிக்க உள்ளதாகவும் தகவல். இந்தப் பாடல் காட்சியுடன் 'ஆர்ஆர்ஆர்' படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைய உள்ளது.
அக்டோபர் 13ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் மற்றொரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். படத்திற்கான வியாபார பேச்சுகளும் பரபரப்பாக நடந்து வருகின்றன. 'பாகுபலி' படங்களை விட இந்தப் படத்தில் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலும் கொண்டு சேர்க்க வேண்டும் என படக்குழு உழைத்து வருகிறார்களாம்.
சுதந்திர போராட்ட காலத்து பீரியட் படம் என்பதாலும், படத்தில் ஆங்கிலேய நடிகையான ஒலிவியா மோரிஸ் உட்பட சில வெளிநாட்டு நடிகர்களும் நடிப்பதால் பான்-இந்தியா படமாக மட்டுமல்லாமல் பான்-வேர்ல்டு படமாக இந்த படம் செல்லவும் வாய்ப்புள்ளது.