இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
வினோத் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் அஜித், ஹுமா குரேஷி மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'நாங்க வேற மாரி' பாடல் நேற்று இரவு யு டியுபில் வெளியிடப்பட்டது.
நீண்ட நாட்களாக இப்படத்தின் பாடலுக்காகக் காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கும், யுவன் ரசிகர்களுக்கும் கொண்டாட்டமான ஒரு பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது. தற்போது யு டியூப் டிரெண்டிங்கில் முதலிடத்திலும், 40 லட்சம் பார்வைகளையும் கடந்து சென்று கொண்டிருக்கிறது.
அஜித் நடித்து கடைசியாக வெளிவந்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் எந்தவிதமான ஹீரோயிச அதிரடிப் பாடலும் இல்லை. அதற்கு முன்பு 'விஸ்வாசம்' படத்தில் 'அடிச்சித் தூக்கு, வேட்டிகட்டு' என இரண்டு பாடல்கள் இருந்தன.
சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு அஜித்தின் அதிரடிப் பாடல் என்பதாலும், அஜித், யுவன் கூட்டணி என்பதாலும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. அந்த எதிர்பார்ப்பை இப்பாடல் பூர்த்தி செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனாலும், இன்னும் அதிரடியாக, செம மாஸாக இருந்திருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக இருக்கிறது. விக்னேஷ் சிவனின் பாடல் வரிகளில் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் உள்ளது. “நல்லா நாளுமே நல்ல நாளுதான், எல்லா நேரமும் நல்ல நேரம்தான்..” என்று மற்றவர்களுக்கும் ஒரு உத்வேகத்தைக் கொடுக்கும் அளவிற்கு எழுதியிருக்கிறார். அது பாடல் முழுவதுமே இருக்கிறது.
அதோடு, “வாழு வாழ விடு அவ்ளோதான் தத்துவம், அதுல கால விட்டா உடைச்சிடுவோம்... கால வாராம வாழ மட்டும் கத்துக்கோ.. கண்டுபிடிச்சிட்டா...'' என யாரையோ சுட்டிக்காட்டும் வரிகளும் பாடலில் உள்ளது.
விக்னேஷ் சிவன் எழுதியதை உணர்வு பூர்வமாகப் பாடும் அளவிற்கு, வார்த்தை உச்சரிப்பை அழுத்தமாக உச்சரிக்கும் அளவிற்கு தமிழை நன்றாக உச்சரிக்கத் தெரிந்த ஒரு பாடகரை இந்தப் பாடலுக்குப் பாட வைத்திருக்கலாம்.
தெலுங்குப் பாடகரான அனுராக் குல்கர்னியின் தமிழ் உச்சரிப்பு பல வார்த்தைகளில் அழுத்தம் திருத்தமாக இல்லை என்பது உண்மை. சங்கர் மகாதேவன் போன்ற கம்பீர, கணீர் குரல் கொண்ட பாடகர் இந்தப் பாடலைப் பாடியிருந்தால் பாடலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.
அதையும் மீறி இப்பாடலை அஜித் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு முக்கியக் காரணம் அஜித். அவருடைய இளமைத் தோற்றம், அழகான தோற்றம் அஜித் ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியைத் தந்துள்ளது. “நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம்' என கொஞ்சம் ஓல்டு கெட்டப்பில் அஜித்தைப் பார்த்த அவருடைய ரசிகர்களுக்கு அஜித்தின் இந்தத் தோற்றமே கொண்டாட்டம்தான்.
மேலும், பாடலுக்காக சேர்த்துள்ள புகைப்படங்களைப் பார்க்கும் போது, எண்ணற்ற நடன நடிகர்களுடன், பிரம்மாண்ட விதத்தில் இப்பாடலைப் படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
'வலிமை' படத்தின் ஓபனிங் பாடலாகத்தான் இப்பாடல் இருக்கும். அப்படியிருந்தால் தியேட்டர்களில் இப்பாடலைக் கேட்க முடியாத அளவிற்கு ரசிகர்களின் கூச்சல் அதிகம் ஒலிக்கும் என்பதை மட்டும் இப்போதே சொல்லிவிடலாம்.
பாடலின் வீடியோ லிங்க் : https://www.youtube.com/watch?v=gjOLk0L830c