ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சின்னி ஜெயந்த். காமெடி, குணச்சித்ரம் என ஏராளமான படங்களில் நடித்து அசத்தி உள்ளார். இவரது மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஐஏஎஸ் தேர்வில் தேசிய அளவில் 75வது இடத்தை பிடித்தார். தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் துணை ஆட்சியராக செயல்பட்டு வருகிறார். இவர் இந்த பொறுப்பில் கிட்டத்தட்ட 4 மாதங்களாக பதவி வகிக்கிறார். ஆனால் அதுப்பற்றிய விபரம் தற்போது தான் வெளியே வந்துள்ளது.
இவர் கூறுகையில், ‛‛பணியில் சேர்ந்த உடன் கல்வி வளர்ச்சி, வர்த்தகம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துவேன் என தெரிவித்துள்ளார் ஸ்ருதன் ஜெய் நாராயணன்.
தனது துறையான திரைத்துரையில் சேர வழிகாட்டாமல் நாட்டிற்கு சேவை செய்யும் இந்திய ஆட்சிப்பணியில் சேர ஊக்குவித்த சின்னி ஜெயந்த்திற்கு அவர்கள் பாராட்டுக்குரியவர்.




