ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
சினிமாவில் பிரசித்தி பெற்ற பாடல்களை படக்காட்சிகளை ஒரு காலத்தில் அப்படியே கிண்டலடித்து வீடியோக்களாக வெளியிட்டு வந்தனர். ஆனால் தற்போது சினிமாவிற்கு சற்றும் குறையாத வகையில் அதே மெனக்கெடலோடு அந்த காட்சிகளில் நடித்து, காண்பவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்கள் இந்த கால இளைஞர்கள் சிலர். அப்படி சமீபத்தில் ஜகமே தந்திரம் படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றும், அதைத்தொடர்ந்து சூர்யா நடித்த அயன் படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்றும் இதுபோல ஹிட்டானது.
குறிப்பாக அயன் படத்தில் இடம்பெற்ற பளபளக்குற பகலா நீ என்கிற பாடலை திருவனந்தபுரம் ராஜாஜி நகர் காலனியை சேர்ந்த டீன்ஏஜ் பையன்கள் சிலர் ரொம்பவே ஆர்வத்துடனும், நேர்த்தியுடனும் ஆடி நடித்திருந்தனர். சமீபத்தில் சோசியல் மீடியாவில் வைரலாக இந்த வீடியோவை பார்த்து நடிகர் சூர்யாவும் தனது பாராட்டை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரபல மலையாள இயக்குனர் கண்ணன் தாமரக்குளம் என்பவர் தற்போது தான் இயக்கி வரும் விருன்னு என்கிற படத்தில் இந்த இளைஞர்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். இவர்களை வைத்து கிட்டத்தட்ட 10 நாட்கள் படப்பிடிப்பும் நடத்தியுள்ளார்கள். இவர்களுக்கு படத்தில் முக்கிய காட்சிகள் முதல் கிளைமாக்ஸ் வரை முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார் இயக்குனர் கண்ணன் தாமரக்குளம். இவர் தான் ஜெயராம், ரம்யா கிருஷ்ணன் நடித்த ஆடுபுலி ஆட்டம் என்கிற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.