ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
2016ம் ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் திரைப்படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. பிங்க் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடித்து உள்ளார். அரசியல் பணிகள் காரணமாக 3 ஆண்டுகள் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பவன் கல்யாண் சற்று இடைவெளிக் பிறகு நடித்திருப்பதால் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
கடந்த 9ந் தேதி வெளியான இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் குவிந்தார்கள். வெளியான முதல் வாரத்தில் 32 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் கொரோனா பிரச்னையால் பல தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டதால் இந்தப் படம் நாளை (ஏப்., 30) அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே, திரைப்படம் தியேட்டரில் வெளியான 50 நாட்களுக்குப் பிறகு ஒடிடியில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்திருந்தார். தற்போது, கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.