சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கிறாரா? | மகுடம் படத்தின் அப்டேட் தந்த விஷால் |

ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகை ஆலியா பட், முன்னணி நடிகர் ரன்பீர் கபூர். இருவரும் காதலிக்கிறார்கள் என்பது உலகமே அறிந்த ஒரு செய்தி. ஆலியா பட் தற்போது 'கங்குபாய் கத்தியவாடி', 'டக்த்' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். 'ஆர்ஆர்ஆர்' படம் மூலம் தென்னிந்தியத் திரையுலகத்தில் அறிமுகமாக உள்ளார்.
காதல் ஜோடிகளான ரன்பீர், ஆலியா முதல் முறையாக 'பிரம்மாஸ்த்ரா' படத்தில் இணைந்து நடிக்கின்றார்கள். இப்படத்தில் அமிதாப், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
கடந்த வருடமே இந்த காதல் ஜோடி திருமணம் செய்யத் திட்டமிட்டதாம். ஆனால், கொரோனா தாக்கத்தால் திருமணத்தைத் தள்ளி வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
கடந்த மாதம் ஆலியா பட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார். அதற்கு முன்னதாக ரன்பீர் கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
இருவரும் உடல் நலம் தேறி அவர்களது சோதனை நெகட்டிவ் என வந்ததால் சில நாட்கள் மும்பையில் ஓய்வெடுத்த பிறகு தற்போது மாலத்தீவில் ஓய்வெடுக்கச் சென்றுள்ளனர்.