'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
இயக்குநர் ராஜமவுலி இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட படங்களான 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி-2' படங்களில் பல்வாள்தேவன் கேரக்டரில் நடித்தவர் ராணா. தெலுங்கு பட உலகின் பிரம்மாண்ட கதாநாயகனாக வலம் வரும் ராணா கடந்த சில வருடங்களாக தமிழ் நடிகை த்ரிஷாவை காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த கிசுகிசு செய்திக்கு முடிவுரை எழுதி இருக்கிறார் ராணா.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் கலந்து கொண்ட ராணா, நிகழ்ச்சி நடத்துனர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது, 'நடிகை த்ரிஷாவை எனக்கு நிறைய பிடிக்கும். கடந்த பத்து ஆண்டுகளாக அவர் எனக்கு நண்பராக இருந்து வருகிறார். சிலகாலம் டேட்டிங்கில் இருந்தேன், ஆனால், அவரை நான் காதலிக்கவில்லை. அப்படி பரப்பப்படும் செய்திகளில் துளியும் உண்மை இல்லை.
தெலுங்கு பட உலகைப் பொறுத்த வரையில், மிகவும் கவர்ச்சியான நடிகை என்றால் அது - அனுஷ்காதான். அதேபோல, இந்திய அளவில் ஹாட் நடிகை என்றால், அது - தீபிகா படுகோன்' என கூறியிருக்கிறார்.